நித்தியக்கடன் ஆகஸ்ட் 27 2020

🎱🔳🎱🔳🎱🔳🎱🔳🎱🔳🎱

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 27*

🎱🔳🎱🔳🎱🔳🎱🔳🎱🔳🎱

🗻 *இன்றைய நித்தியக்கடன்*

🗻 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🗻 *இன்றைய சாதகம்*

🗻 வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.

🗻 *இன்றைய நற்சிந்தனை*

🗻 கர்ம வினை பதிவுகள் இரண்டு வகைப்படும். ஒன்று நல்வினை பதிவு மற்றொன்று தீவினை பதிவு. இந்த இருவினை பதிவுகளின் இழுபறியான நிலையைத்தான் நாம் வாழ்க்கையில் போராட்டமாகவும், சிக்கலாகவும், மன குழப்பமாகவும், உடல் நோயாகவும் உணர்கின்றோம். இந்த நல்வினை பதிவானது மேல் நோக்கு விசையில் இயங்கக்கூடியது. நம்முடைய மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி பயணித்து இயங்கும் அமைப்புடையது. தீவினை பதிவு என்பது கீழ்நோக்கு விசையில் இயங்கக்கூடியது. மூலாதாரத்திலிருந்து பூமியை நோக்கி கீழ்நோக்கி இயங்கக்கூடிய அமைப்புடையது. இந்த இரு இயக்கங்களும் எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கின்றது, இயங்குகின்றது...

🗻 *இன்றைய தற்சோதனை*

🗻 தீவினை பதிவின் ஆதிக்கம் இருக்கும் போது நாம் உணர்ச்சிவயப்பட்டு பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இதனடிப்படையில் செயல்களை செய்ய முனைவோம். இது கீழ்நோக்கு விசையின் வெளிப்பாடாகும். மேல் நோக்கு விசை துரிதமடைய வேண்டுமானால் நல்வினைப் பதிவு இயக்கத்திற்கு வரவேண்டும். முறையான பயிற்சியை மேற்கொள்ளும் போது இயல்பாக அமையும். இவ்வியக்கம் நிறை மனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமநேர்நிறை உணர்வு, மன்னிப்பு இவ்வகையான பண்புகளையும் குணங்களையும் துரிதமடையச் செய்யும்.

🗻 *இன்றைய பண்புப்பயிற்சி*

🗻 நம்முடைய பழக்க வழக்கங்கள் மீது கவனத்தோடு இருந்து நல்வினை பதிவுகள் துரிதம் அடையக்கூடிய, முறையிலும் வகையிலும் செயல்கள் அனைத்தையும் ஒழுங்கமைக்க கற்றுக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, காலை நேரம் செய்ய வேண்டிய காயகல்பம், தவம், மாலை நேரம் செய்ய வேண்டிய காயகல்பம், தவம், தற்சோதனை இவை அனைத்திலும் முறையாக நம்மை இணைத்துக் கொள்ளும்போது மேல்நோக்கிய பயணம் துவங்குகிறது. ஆன்மீக வாழ்க்கை பயணத்தில் எந்த ஒரு தருணத்திலும் நமக்கு நடைபெறும் அனுபவங்களை கொண்டு உணர்ச்சிவசப்பட்டு விடக் கூடாது. அது நாளைய வளர்ச்சிக்கு பெரிய தடையாக அமைந்து விடும். வாழ்க வளமுடன்...

🗻 *இன்றைய மூலிகை*

🗻 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

🗻 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🗻 *ஆகாம்ய கர்மம் எனும்  புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🗻 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🗻 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🗻 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments