🌌💥🌌💥🌌💥🌌💥🌌💥🌌
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 26*
🌌💥🌌💥🌌💥🌌💥🌌💥🌌
💦 *இன்றைய நித்தியக்கடன்*
💦 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
💦 *இன்றைய சாதகம்*
💦 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
💦 *இன்றைய நற்சிந்தனை*
💦 இதுநாள் வரை இம்மண்ணுலகில் மனிதர்கள் வாழ்ந்து பழகிய பழக்கவழக்கங்களில் தேவையானவைகள், தேவை இல்லாதவைகள், மறக்க வேண்டியவைகள், மறக்கக் கூடாதவைகள் என இரண்டுமே இருக்கின்றன. இவைகளில் மறக்கக்கூடாததை மறந்து விட்டாலும் துன்பம், மறக்க வேண்டியதை மறக்காமல் நினைவில் வைத்திருந்தாலும் துன்பம். எப்படி இவைகளை பிரித்து உணர்வது, மறக்க வேண்டியவை, மறக்கக் கூடாதவை என சிந்திப்போம்...
💦 *இன்றைய தற்சோதனை*
💦 எதைப் பயன்படுத்தி நாம் பிரித்துணர்வது என்பதை மனதை பயன்படுத்தி தான் உணர வேண்டும். அப்படி மனதை பயன் படுத்துவதற்கு முன்னதாக, மனதை பண்படுத்தும் முயற்சியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மனவளக்கலை பயிற்சிகளை மேற்கொள்ளும்போது நம்முடைய மனமானது பக்குவப்பட்ட நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ளும். இந்த முதிர்ச்சியான மனோநிலையில் நம்மால் எடுக்கப்படும் முடிவுகள் நலமாகவும், இனிமையாகவும் அமையும்.
💦 *இன்றைய பண்புப்பயிற்சி*
💦 பல்வேறு வடிவங்களில் இந்த மனவளக்கலை பயிற்சிகள் நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் என்று தனித்தனியாக பிரித்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மூன்றிலும் நம்மை நாம் பக்குவப்படுத்தினால் தான் நம்மிடம் இருக்கக்கூடிய பழக்கவழக்கங்களில் தேவையானவைகளுக்கு, படிகட்டவும் தேவை இல்லாதவைகளை வடிகட்டவும், முடியும் பிரித்துணரும் மனப்பக்குவத்தில் உயர்வோம். நாம் நாமக்கான வாழ்வை வாழ்வோம். வாழ்க வளமுடன்...
💦 *இன்றைய மூலிகை*
💦 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
💦 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
💦 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💦 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💦 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💦 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment