நித்தியக்கடன் ஆகஸ்ட் 24 2020

🕯️⏺️🕯️⏺️🕯️⏺️🕯️⏺️🕯️⏺️🕯️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 24*

🕯️⏺️🕯️⏺️🕯️⏺️🕯️⏺️🕯️⏺️🕯️

🏕️ *இன்றைய நித்தியக்கடன்*

🏕️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🏕️ *இன்றைய சாதகம்*

🏕️ திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

🏕️ *இன்றைய நற்சிந்தனை*

🏕️ மனிதர்களுடைய வாழ்க்கை என்பது அகமும் புறமும் கலந்ததாகும். புறவாழ்க்கையில் மட்டுமே மனிதனால் நிறைவு பெற்று விட முடியாது. அக வாழ்விலும் மனிதன் தன்னை இணைத்துக் கொண்டால் தான் தன்னிறைவு பெற முடியும். புற வாழ்க்கை என்பது தோல், நாக்கு, மூக்கு, கண், காது இந்த ஞானேந்திரியங்கள் வழியாகவும் கை, கால், வாய், குதம், பால்குறி ஆகிய இந்த கர்மேந்திரியங்கள் வழியாக வாழும் வாழ்க்கையாகும்.

🏕️ *இன்றைய தற்சோதனை*

🏕️ அக வாழ்க்கை என்பது அறிவு, மனம், உயிர், இறைநிலை இவற்றை சார்ந்ததாகும். இவைகளை தெரிந்து கொண்டு இவைகளோடு இணைந்து செயல்பட கூடிய முறை என்று ஒன்று இருக்கிறது. அந்த முறைக்கு பெயர் தான் அறநெறியும் இறையுணர்வும். புறத்தில் மட்டுமே கவனம் செலுத்தி அதன்பால் மட்டுமே வாழ்ந்தால் இந்த அக வாழ்க்கைக்கு நம்மால் தயாராக முடியாது. மறை பொருள்களை உணர்ந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

🏕️ *இன்றைய பண்புப்பயிற்சி*

🏕️ அவ்வாறான முயற்சிக்கு நாம் சரியான பயிற்சி செய்தலும் அவசியமாகும். பயிற்சி இல்லாமல் அக வாழ்க்கையில் நம்மால் இணைய முடியாது. இந்த அகவாழ்க்கை பயணம் இனிதே துவங்கி விட்டால் நாம் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்போம். குறைவு இல்லாத மகிழ்ச்சியும் மன நிறைவும் கிட்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் எல்லா வகையிலும் நிறைவாக வாழ்வோம். இத்தகைய வாழ்க்கைக்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்வோம். மனவளக்கலை பயிற்சியோடு ஒவ்வொரு நிமிடமும் இணைந்தே பயணிப்போம். வாழ்க வளமுடன்...

🏕️ *இன்றைய மூலிகை*

🏕️ *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🏕️ அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🏕️ இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🏕️ *ஆகாம்ய கர்மம் எனும்  புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🏕️ *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🏕️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🏕️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments