🌌🍭🌌🍭🌌🍭🌌🍭🌌🍭🌌
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 22*
🌌🍭🌌🍭🌌🍭🌌🍭🌌🍭🌌
🌀 *இன்றைய நித்தியக்கடன்*
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌀 *இன்றைய சாதகம்*
🌀 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🌀 *இன்றைய நற்சிந்தனை*
🌀 உயிர் துகளானது வேகமான தற்சுழற்சி உடையது என்றும், சுற்றிக்கொண்டே ஓடுகிறது என்றும், மகரிஷி அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள். உயிர் துகளின் தற்சுழற்சியை நாம் சின்னதாக இன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். எல்லா உயிர் துகள்களுக்கும் தற்சுழற்சி விரைவு ஒரே மாதிரியாக இருக்குமா என்றால்! அது அப்படி இருக்காது. வேகம் குறைந்த சுழல் விரைவு, வேகம் அதிகமான சுழல் விரைவு கொண்ட உயிர் துகள்கள் இருக்கின்றன. தற்சுழற்சி விரைவு அதிகமுள்ள உயிர் துகள்களில் தான் காந்த இயக்கமும் அதிகமாக இருக்கும். குறைந்த சுழல் ஓட்டத்தில் இருக்கும் உயிர் துகள்களில் காந்த இயக்கமும் குறைவாகவே இருக்கும்.
🌀 *இன்றைய தற்சோதனை*
🌀 ஆன்மீக வாழ்க்கைக்கும் உள்ளுணர்வு பயணத்திற்கும் தற்சுழற்சி வேக விரைவு அதிகமுள்ள உயிர் துகள்கள் தான் தேவைப்படுகிறது. கண்களுக்கு தெரியாத உயிர் துகள்களில் எப்படி வேக விரைவு உடைய உயிர் துகள்களை கண்டுபிடித்து, அதை நம்மோடு இணைத்துக் கொள்வது என்ற கேள்வி எழலாம். இந்த வேலையை நேரடியாக நாம் செய்ய முடியாது. ஐந்தில் அளவு முறையை கடைபிடித்து நாள் தவறாமல் மனவளக்கலை பயிற்சிகளை முறையாக இயல்பாக செய்து கொண்டே வந்தால், தற்சுழற்சி விரைவு அதிகமுள்ள உயிர் துகள்களை நம் கருமையம் இயல்பாகவே ஈர்த்துக்கொள்ளும். இந்த ஈர்த்துக்கொள்ளும் நிகழ்ச்சியானது எவ்வாறு நடைபெறுகிறது என்றால்...
🌀 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌀 நம்முடைய கருமையத்தில் உள்ள தூய்மைக்கு ஏற்ப, தற்சுழற்சி விரைவு அதிகமுள்ள உயிர்கள் நம் கருமையத்தால் ஈர்கப்படும். கருமையம் தூய்மை பெற பெற நமக்குள் தற்சுழற்சி விரைவு அதிகமுள்ள உயிர் துகள்களும் காந்தமும் அதிகரிக்கும். இதன் விளைவாக பிரபஞ்சம் முழுவதும் எவ்வளவு தூரம் விரிந்து உயிரும் காந்தமும் இயங்குகிறதோ அவ்வளவு அனுபவம் ஏற்படும். இந்த பிரபஞ்ச தன்மாற்ற அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ள கருமைய தூய்மை ஒன்றுதான் சிறந்த வழிமுறையாகும். இரண்டொழுக்க பண்பாடு, நன்னடத்தை, எதார்த்தமாய் உயிர்கள் பால் கொள்ளும் அன்பும் கருணையும் கருமையத்தை தூய்மையாக்கும். தூய்மை பெறுவோம் அக துணிவுடன் வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🌀 *இன்றைய மூலிகை*
🌀 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🌀 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌀 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌀 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment