நித்தியக்கடன் ஆகஸ்ட் 21 2020

🌐🌿🌐🌿🌐🌿🌐🌿🌐🌿🌐

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 21*

🌐🌿🌐🌿🌐🌿🌐🌿🌐🌿🌐

🎭 *இன்றைய நித்தியக்கடன்*

🎭 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🎭 *இன்றைய சாதகம்*

🎭 வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.

🎭 *இன்றைய நற்சிந்தனை*

🎭 ரகசிய குறியீடு (password) இது இல்லாமல் இதனை பயன்படுத்தாமல் நாம் கணினியில் எந்த ஒரு வலைதளங்களுக்கும் செல்ல முடியாது. தனிமனித பாதுகாப்பு கருதி இது பயன்பாட்டில் இணைக்க பட்டதாகும். இதேபோன்று ஆன்மிக வாழ்க்கையிலும் பயணத்திலும், ஒரு தளத்தை விட்டு அடுத்த தளம் செல்லும்போது அங்கே ரகசிய குறியீடு தேவைப்படுகிறது. நம்முடைய கருமைய அமைப்பு படலம் படலமாக அமைந்திருக்கிறது. ஒரு படலத்தில் இருந்து மற்றொரு படலத்திற்கு பயணம் செய்யும் போது ஏற்படுவது தான் அனுபவமாகும்.

🎭 *இன்றைய தற்சோதனை*

🎭 இந்த அனுபவத்திற்கும் ஆங்காங்கே அவரவர் அனுபவத்தை பெற்ற, பயன்படுத்திய விதத்திற்கும், முறைக்கும் ஏற்றார்போல் இறைவனாலேயே தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதற்குப் பெயர்தான் ஞானம். உங்கள் ரகசிய குறியீடுடானது நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளை எந்த முறையோடு கையாள்கிறிர்களோ அதை பொறுத்தே அமைகிறது. இயற்கை  பல்வேறு உருவங்களில், நாம் இந்த பூமியில் வாழ்ந்து செய்த செயல் பதிவுகளாக அனைத்தும், நம்முடைய கருமையத்தில் சஞ்சித கருமங்களாக இருக்கின்றது, என்பதை நாம் நன்கு அறிவோம்.

🎭 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎭 இந்த பதிவுகளில் நல்வினை பதிவும் உண்டு தீவினை பதிவும் உண்டு. நல்வினை பதிவுகளை அதிகரிக்கும் செயல்களில் நம்மை மன ஆர்வத்தோடு எப்போதும் ஈடுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்‌. எந்தவிதமான பற்றுதலும் ஒற்றுதலுமில்லாமல் செயலில் நம்மை இணைத்துக் கொள்ளும் போது, கருமையத்தின் தீவினை பதிவுகள் தளர்வு அடையும். இது தளர்வு பெறாமல் அவருடைய உள்ளுணர்வு பயணம் துவங்குவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவை நான்கும் கருமத்திலுள்ள தீவினை பதிவை தளர்த்தும் விதத்திலேயே  அமைக்கப்பட்டிருக்கிறது. தரத்தில் உயர்வோம், தன்னிலை விளக்கம் பெறுவோம். வாழ்க வளமுடன்...

🎭 *இன்றைய மூலிகை*

🎭 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

🎭 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

🎭 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

🎭 *ஆகாம்ய கர்மம் எனும்  புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎭 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎭 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎭 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments