💥🌻💥🌻💥🌻💥🌻💥🌻💥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 19*
💥🌻💥🌻💥🌻💥🌻💥🌻💥
🏞️ *இன்றைய நித்தியக்கடன்*
🏞️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🏞️ *இன்றைய சாதகம்*
🏞️ புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🏞️ *இன்றைய நற்சிந்தனை*
🏞️ முன்னோர்கள் கூறிய பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்ற, பதினாறு செல்வங்களை தவறுதலாக புரிந்து கொண்டு பதினாறு மக்கள் பேறையும் பெற்று, என்று புரிந்து கொண்டவர்களும் உண்டு. இதனை மகரிஷி அவர்கள் இன்னது தான் என்று தெளிவாக விளக்கியுள்ளார்கள். அந்த பதினாறு செல்வங்கள் இறையுணர்வு, அறநெறி, கல்வி, தனம், தானியம், இளமை, வலிவு, துணிவு, நன்மக்கட்பேறு, அறிவிலுயர்ந்தோர் நட்பு, அன்புடைமை, அகத்தவம், அழகு, உயர்புகழ், மனித மதிப்புணர்ந்தொழுகும் பண்பு, பொறையுடைமை. இந்த பதினாறு செல்வங்களை பெறுவதில் இயற்கையில் ஒரு நீதி உண்டு. அது என்னவென்றால்...
🏞️ *இன்றைய தற்சோதனை*
🏞️ அவரவர்களுடைய கருமையத்தின் தன்மைக்கு ஏற்ப இந்த செல்வ வளங்கள் பதினாறும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். பொதுவாக எல்லோருக்கும் நூறு சதவீத வளம் என்பது அமைவதில்லை. கருமையத்திலுள்ள தரத்திற்கும் தன்மைக்கும் ஏற்ப இதில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. விதிவிலக்காக ஞானிகளுக்கும் மகன்களுக்கும் இந்த செல்வ வளங்கள் நிறைவாக 100% அமையும். இந்த நிதியானது எப்படி அமைந்து இயங்குகிறது என்பதை விஞ்ஞான ரீதியான சிந்தித்து தெரிந்து கொள்வோம். 50% இந்த செல்வ வளங்களை பெறுவதற்கு ஒரு கருமையத்திற்கு வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் பதினாறு செல்வங்களும் 50% வளர்ச்சி பெறாது. ஒன்று 10% மற்றொன்று 20% என்று பதினாறு செல்வங்களும் பகிர்ந்து அளிக்கப்பட்டு வளரும் மேலும்...
🏞️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🏞️ இந்த பதினாறு செல்வ வளங்களும் அவரவருடைய வாழும் முறையை பொருத்து, இதில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. இந்த விழுக்காடு என்பது பொதுவானதாகும். இந்த கருமையம் இந்த செல்வத்தில் உயர்வு பெறும் என்றெல்லாம் எதுவும் கிடையாது. அவரவர்தம் முயற்சிக்கும், உளஆர்வத்திற்கும், வாழும் சூழலுக்கு முறைக்கும் ஏற்ப இது மாறுபடும் வேறுபடும். பொதுவாக இருந்து இயங்கும் இந்த இறைநீதியை, நாம்தான் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நல்ல முறையில் வாழ முயற்சிக்க வேண்டும். முறையான பயிற்சி நம்மை இந்த பதினாறு செல்வங்களை நிறைவாக பெறுவதற்கு, ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் காண்போம் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. திட்டமிட்டு செயலாற்றி வாழ்வோம்... வாழ்க வளமுடன்...
🏞️ *இன்றைய மூலிகை*
🏞️ *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🏞️ இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🏞️ *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🏞️ *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🏞️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🏞️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment