நித்தியக்கடன் ஆகஸ்ட் 18 2020

🥥🥜🥥🥜🥥🥜🥥🥜🥥🥜🥥

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 18*

🥥🥜🥥🥜🥥🥜🥥🥜🥥🥜🥥

⛰️ *இன்றைய நித்தியக்கடன்*

⛰️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

⛰️ *இன்றைய சாதகம்*

⛰️ செவ்வாய்கிழமை இன்று அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.

⛰️ *இன்றைய நற்சிந்தனை*

⛰️ உடல் ஆரோக்கியம், உயிர் வளம், சீரான அணு அடுக்கு இயக்கம், சீவகாந்த திணிவு இவை அனைத்தும் ஏதோ ஒன்றால் அமைவது அல்ல. நம்முடைய செயலின் விளைவாக நாம் உண்ணும் உணவின் வழியாக அமைகிறது. ஏனென்றால் நாம் உட்கொண்ட உணவுதான் இந்த உடலாக தன்மாற்றம் அடைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. நல்ல ரத்தம், சதை, கொழுப்பு, எழும்பு, மஜ்ஜை, ஜீவவித்து குழம்பு இவையெல்லாம்  ஆரோக்கியமானதாக அமைய வேண்டும் என்றால், உண்ணும் உணவு தரமானதாக இருக்க வேண்டும். உணவு உண்ணும் போது என்னும் எண்ணம் தரமானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நாம் நோய் எதிர்ப்பு சக்தியோடும் நல்ல சிந்தனையோடும் அன்றாட கடமைகளை சுலபமாக செய்து முடிக்க முடியும்.

⛰️ *இன்றைய தற்சோதனை*

⛰️ உணவின் தரத்தையும் தன்மையையும் நாம் ஆய்வு செய்து தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் என்னும் எண்ணத்தின் மூலமாக கூட உணவினுடைய தரத்தையும் தன்மையையும் நிலைகுலையச் செய்து விடமுடியும். உணவு உண்ணும்போது நல்ல சிந்தனையோடும் இடத்தூய்மையோடும் இருந்து உணவை உண்ண வேண்டும். நினைவுகளால் பல உண்மைகளை நாம் நமக்குள் உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். இவைகள் முறையானதாக அமைவதற்கு தவம், தற்சோதனை, காயகல்பம், உடற்பயிற்சி இந்நான்கும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமையும்.

⛰️ *இன்றைய பண்புப்பயிற்சி*

⛰️ நமக்குள் ஏற்கனவே இருக்கும் களங்கத்தை போக்கி கொண்டு, புதிதாக நம்மோடு இணையும் அனைத்தையும் நல்வினை பதிவாக அமைத்துக் கொள்ளவும். மனதை நிதானமாக எப்போதும் இயக்கி பழக்க முயற்சி செய்வோமாக. ஏனென்றால் மன அலைச்சுழல் குறைந்த நிலையில் இயங்கும் போது தான், உயிர் விரையம் காந்த விரையம் இல்லாத சூழ்நிலைகள் உருவாகும். இதன் வளர்ச்சி ஒரு காலக்கட்டத்திற்கு பின்னால் உருவாவதே உள்ளுணர்வு பயணமாகும். இது அனைவருக்கும் சாத்தியமே, முறையாக முயற்சிப்போம், முடிவில் ஒன்றிணைவோம்... வாழ்க வளமுடன்...

⛰️ *இன்றைய மூலிகை*

⛰️ *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

⛰️ இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

⛰️ *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

⛰️ *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

⛰️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

⛰️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments