நித்தியக்கடன் ஆகஸ்ட் 15 2020

🗾🎄🗾🎄🗾🎄🗾🎄🗾🎄🗾

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 15*

🗾🎄🗾🎄🗾🎄🗾🎄🗾🎄🗾

🎯 *இன்றைய நித்தியக்கடன்*

🎯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🎯 *இன்றைய சாதகம்*

🎯 சனிக்கிழமை ‌.
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்..

🎯 *இன்றைய நற்சிந்தனை*

🎯 கண்களுக்கு தெரிகிறது என்பதற்காக கானல்நீர் உண்மையாகாது. கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக உயிர் பொய்யாகாது. இந்த இருவேறுபட்ட நிலைகளை சந்திப்பது நாம் தான். எது சரி? எது தவறு? என்பதை எல்லாம் தீர்மானிப்பது அறிவும் மனமுமாகும். இந்த மனதிற்கும் அறிவுக்குமான நட்பு சிறந்த முறையில் இயங்கினால்தான், இவைகளை நல்ல முறையில் பயன்படுத்தி மனிதர்களாகிய நாம் நலமுடன் வாழ முடியும்.

🎯 *இன்றைய தற்சோதனை*

🎯 அறிவை ஒதுக்கிவைத்துவிட்டோ மனதை ஒதுக்கிவைத்துவிட்டோ, நம்முடைய வாழ்க்கையை நாம் வாழவே முடியாது. அறிவு, மனம், உயிர், உடல் இந்த நான்கையும் ஒன்று சேர்த்துக் கொண்ட தொகுப்பினால் ஏற்படும், அனுபவங்களிலும் விளைவுகளிலும் தான் நம்முடைய வாழ்க்கை பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பயணமானது இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் எதிர்வரும் காலங்களில் அமைய வேண்டுமானால், இவைகளுக்கு இடையே நல்லதோர் நட்பை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

🎯 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎯 இந்த நான்கிற்குமான நட்பு, பயிற்சியை நல்ல முறையில் அமைத்துக்கொண்டு ஒன்றுக்கு ஒன்று முரண்பாடில்லாமல், பராமரித்து வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்தவர்களுக்கு பெயர்தான் ஞானிகள், மகான்கள், சித்தர்கள், தன்னிலை உணர்ந்த பெரியார்கள். நம்முடைய மனவளக்கலை பயிற்சி இந்த நட்பு முறையைத்தான்  உருவாக்குகிறது. நாள் தவறாமல் செய்யும் பயிற்சியின் விளைவு அறிவுக்கும், மனதிற்கும், உயிருக்கும், உடலுக்குமான நட்பை வலுப்படுத்துகிறது. விளைவரிந்த விழிப்பு நிலையோடு நாமும் நம் குடும்பமும் வாழ்வோம். வாழ்க வளமுடன்...

🎯 *இன்றைய மூலிகை*

🎯 *கரும்பு சாறு* கரும்பு சாறு இஞ்சி, எலுமிச்சை,( ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

🎯 *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎯 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎯 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎯 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments