🔥🌌🔥🌌🔥🌌🔥🌌🔥🌌🔥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 13*
🔥🌌🔥🌌🔥🌌🔥🌌🔥🌌🔥
🛢️ *இன்றைய நித்தியக்கடன்*
🛢️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🛢️ *இன்றைய சாதகம்*
🛢️ வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🛢️ *இன்றைய நற்சிந்தனை*
🛢️ மழையாக பொழியும் நீரை தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப பாசனத்திற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்துவது போல, வான் காந்தத்தை உடலுக்குள் சேகரித்து பழகவேண்டும். கோள்களின் சஞ்சார நிலைக்கு ஏற்பவும், வெட்ப தட்ப ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்பவும், உணவு எண்ணம் இவைகளை பயன்படுத்தும் முறைகளுக்கு ஏற்பவும், ஜீவ காந்தத்தில் அவ்வப்போது நம் உடலுக்குளாக ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.
🛢️ *இன்றைய தற்சோதனை*
🛢️ இந்த செலவுகளை சரி செய்து கொள்ளவும், எப்போதும் சமநிலையில் வைத்து பயன்படுத்தவும், உடலையும் உயிரையும் மனதையும் பாதிக்காத வண்ணம் பாதுகாத்து கொள்ளவும், ஜீவகாந்தத்தை சேமித்து பழகவேண்டும். இந்த சேமிப்பு பழக்கம் தான் நம்மை இறைநிலை வரை அழைத்துச் செல்லவும் பயன்படப் போகிறது. உடல் ஆரோக்கியமும், மன வளமும், உயிர் வளமும் இந்த சேமிப்பின் அடிப்படையிலேயே அமைகிறது...
🛢️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🛢️ சீவகாந்தம் போதிய அளவு நமக்குள் இருப்பாக இருக்கும்போது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவே முடியும்.நம்முடைய எல்லா வகையான செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இருக்கும் ஆற்றல் சிவகாந்தமே ஆகும். இந்த சிறப்பு மிக்க சிவ காந்தத்தை சேகரித்து வாழும் பண்பில் உயர்வோம். உடலால், மனதால், உயிரால் வறுமை இல்லாமல் நாமும் நம் குடும்பமும் வாழ்வோம்... வாழ்க வளமுடன்...
🛢️ *இன்றைய மூலிகை*
🛢️ *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
🛢️ அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
🛢️ *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🛢️ *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🛢️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🛢️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment