🌸🐝🌸🐝🌸🐝🌸🐝🌸🐝🌸
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 12*
🌸🐝🌸🐝🌸🐝🌸🐝🌸🐝🌸
🧠 *இன்றைய நித்தியக்கடன்*
🧠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🧠 *இன்றைய சாதகம்*
🧠 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🧠 *இன்றைய நற்சிந்தனை*
🧠 தேன் சாதாரண உணவுப் பொருள் மட்டுமல்ல, அதற்குள் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. மற்ற எந்த வகை மூலிகைக்கும் மருந்துக்கும் இல்லாத தனித்துவம் (be unique) இந்த தேனுக்கு உண்டு. மலைகளிலும், காடுகளிலும், பலவகையான பூக்களிலும் இருந்து சேகரிக்கப்பட்ட தேனானது முழுமையான சிறந்த மூலிகை மருந்தாகும். இதனுடைய சிறப்பை உணர்ந்ததால் சித்த மருத்துவத்தில் தேனோடு குழைத்து உண்ணக் கூடிய மருந்துகள் வழங்கப்படுகின்றன. இது போன்றே வான்காந்த்திலும் பல்வேறு சிறப்புகள் உள்ளடக்கமாக இருக்கின்றது.
🧠 *இன்றைய தற்சோதனை*
🧠 பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்துமே வான்காந்தத்தில் உள்ளது. யார் வேண்டுமானாலும் இந்த வான்காந்த தோடு சரியாக முறையாக, இணைந்து தனக்கும் அதற்குமான இணக்கத் தன்மையை எல்லா வகையிலும் உயர்த்திக் கொண்டால், அக்காந்தத்தில் உள்ளடங்கி இருக்கும் அனைத்து விதமான ரகசியங்களும், அவருடைய அறிவில் சிந்தனையில் மூளை செல்கள் வழியாக விரிந்து செயல்படத் துவங்கும். தன்னைத் தானே அறிமுகம் செய்து கொள்ளும். இது நடைபெற வேண்டுமானால் உயிர் வளமும், மனவளமும், உடல் நலமும் தேவை.
🧠 *இன்றைய பண்புப்பயிற்சி*
🧠 ஆறுவகை குணங்களாகிய பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இந்த தீயகுணங்களை (காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியங்கள்) சீரமைத்து நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமநேர்நிறை உணர்வு, மன்னிப்பு என்ற குணங்களாக மாற்றி அமைத்துக் கொண்டு இரண்டொழுக்க பண்பாட்டை கடைபிடித்து, ஒவ்வொரு நாளும் பயிற்சியை முழுமையான தன்னார்வத்தோடு செய்து வரும்போது "பிறப்பென்னும் பேதமை நீங்கி சிறப்பென்னும் செம்பொருள் காண்பதறிவு" என்னும் வள்ளுவரின் குறள் அனுபவமாகும்...வாழ்க வளமுடன்...
🧠 *இன்றைய மூலிகை*
🧠 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🧠 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🧠 *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🧠 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🧠 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🧠 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment