🥝💠🥝💠🥝💠🥝💠🥝💠🥝
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 10*
🥝💠🥝💠🥝💠🥝💠🥝💠🥝
⚕️ *இன்றைய நித்தியக்கடன்*
⚕️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
⚕️ *இன்றைய சாதகம்*
⚕️ திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
⚕️ *இன்றைய நற்சிந்தனை*
⚕️ எல்லாம் வல்ல இறைநிலை சுத்தவெளி காந்தமாகவும் இறைத்துகளாகவும் பஞ்சபூதங்களாகவும் கோடான கோடி கோள்களாகவும் உயிரினங்களாவும் அதனதனுள் அறிவாகவும் எப்படி இயங்குகிறது என்பதையெல்லாம் நாம் உணர வேண்டுமானால் அதற்கு தகுந்த முறையான பயிற்சியும் உணவு முறையும் மனப்பக்குவமும் மிகவும் அவசியம் இறைநிலையை உணர்வதற்கான எல்லாவிதமான அமைப்புகளையும் கொண்டு உருவானதுதான் இந்த மனித உடலமைப்பாகும்.
⚕️ *இன்றைய தற்சோதனை*
⚕️ இறைநிலையின் உடைய தன் மாற்றங்கள் அனைத்தையும் உணர்வதற்கான எல்லா விதமான வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் நாம் அந்த அனுபவத்தை பெறமுடியும் அப்படி என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்று பார்ப்போம். பருவுடல் நுண்ணுடல் காந்த உடல் என்று மூன்று வகையான உடலமைப்பு நமக்கு இருக்கிறது என்பதை நாம் முன்னமே அறிவோம் இந்த மூன்று உடலிலும் இருக்கக்கூடிய கலகங்களை பழுதுகளை அழுக்குகளை போக்கி கொள்ளும்போது அங்கிருந்து நம்முடைய அகநோக்குப் பயணம் துவங்குகிறது இறைநிலையை உணர்வதற்கான முதல் கதவு திறக்கப்படுகிறது.
⚕️ *இன்றைய பண்புப்பயிற்சி*
⚕️ இந்த மூன்று உடல்களிலும் களங்கம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வதுஉடலில் நோய், மனதில் குழப்பம், வாழ்க்கையில் சிக்கல், பேராசை சினம் கடும்பற்று முறையற்ற பால் கவர்ச்சி உயர்வு தாழ்வு மனப்பான்மை வஞ்சம் இவை அனைத்தும் மூன்று உடல்களில் இருக்கக்கூடிய கலங்களின் வெளிப்பாடே ஆகும் உடற்பயிற்சி காயகல்பம் தவம் தற்சோதனை எளிமையான உணவு முறை இவைகளையெல்லாம் திட்டமிட்டுக் கொண்டு நாள் தவறாமல் வாழ்க்கையில் கடைபிடித்து வரும்போது இந்த களங்கங்கள் படிப்படியாக கழிந்து கொண்டே வரும். பழுதுகளை நீக்கி பயன்பெறுவோம் நாளைய ஞான சமுதாயத்தை வாழ்த்தி வரவேற்போம். வாழ்க வளமுடன்...
⚕️ *இன்றைய மூலிகை*
⚕️ *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
⚕️ அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
⚕️ இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
⚕️ *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
⚕️ *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
⚕️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
⚕️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment