நித்தியக்கடன் ஆகஸ்ட் 07 2020

🌠💐🌠💐🌠💐🌠💐🌠💐🌠

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 07*

🌠💐🌠💐🌠💐🌠💐🌠💐🌠

💯 *இன்றைய நித்தியக்கடன்*

💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

💯 *இன்றைய சாதகம்*

💯 வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.

💯 *இன்றைய நற்சிந்தனை*

💯 உங்களுடைய மனம் எப்போது முன்னுக்கு பின்னாக, மற்றவர்களுடைய உணர்வுகளை மதிக்காமல், புலன் மயக்கத்தில் விளைவைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் ஒரு செயலை செய்யத் தூண்டுகிறதோ, அப்போது நீங்கள் தாராளமாக முடிவு செய்துவிடலாம் நாம் இறைநிலையை உணர்வதற்கான தகுதியை இன்னும் பெறவில்லை என்று.

💯 *இன்றைய தற்சோதனை*

💯 எவ்விதத்தில் மனம் இருந்து இயங்கினால் ஞானம் விளையுமோ, அது எவர் ஒருவருக்கும் துன்பம் செய்யாமல், எண்ணாமல், பேசாமல் வாழும் வாழ்க்கை முறைதான். எல்லாம் வல்ல இறை ஆற்றலை தெய்வத்தை உணர்வதற்கான, தகுதியை உயர்த்துகிறது. இந்த தகுதி உயர்வுக்கு தற்சோதனை செய்து தன்னை எப்போதும் அதற்கு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த மனதில் தான் ஞானம் முளைக்கத் துவங்கும்.

💯 *இன்றைய பண்புப்பயிற்சி*

💯 ஞானம் என்பதை பெரிதாக கற்பனை செய்துகொள்ள வேண்டாம். தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, தன்னுடைய எண்ணம், சொல், செயல் இவைகள் வழியாக துன்ப விளைவை ஏற்படுத்திக் கொள்ளாத பண்பில் வாழும்போது இதன் விளைவாக வருவது தான் ஞானம். வேறு ஏதோ என்று நீங்கள் விளங்கிக் கொண்டாலோ அல்லது இதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாவிட்டாலோ முடிவு செய்து கொள்ளலாம் நாம் அதற்கான (ஞானம் முளைப்பதற்கான) வாய்ப்பிலிருந்து விலகி நிற்கிறோம் என்று. வாழ்க வளமுடன்...

💯 *இன்றைய மூலிகை*

💯 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

💯 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

💯 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

💯 *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

💯 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

💯 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

💯 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments