💢🌸💢🌸💢🌸💢🌸💢🌸💢
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஆகஸ்ட் 05*
💢🌸💢🌸💢🌸💢🌸💢🌸💢
🔮 *இன்றைய நித்தியக்கடன்*
🔮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🔮 *இன்றைய சாதகம்*
🔮 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🔮 *இன்றைய நற்சிந்தனை*
🔮 சுத்தவெளி, இறைநிலை இயற்கை, தெய்வம், அறிவு இவை அனைத்துமே ஒன்றுதான். பிரபஞ்சமும், பிரபஞ்சத்தில் அனைத்து தோற்றங்களாகவும் இருந்து கொண்டு, தன்னை எங்கேயும் வெளிக்காட்டிக் கொள்ளாத தூய பொருளாக இருக்கும், தெய்வ நிலையை உணர்ந்து கொள்வதற்கு நாம் மனதளவில் தயாராக வேண்டும், மனதை பண்படுத்தி பக்குவப்படுத்த வேண்டும். அவன் நம்மை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டான், பலவிதமான சோதனைகள் வைத்து அதிலெல்லாம் தேர்ச்சி பெறுகிறோமா, என்று பார்த்து அதன் பின் தேர்வு செய்து படிப்படியாக பயிற்சி அளிப்பான், அவனோடு இணைவதற்கு...
🔮 *இன்றைய தற்சோதனை*
🔮 இறைநிலையினுடைய தன்மையும் தரத்தையும் சிறுக சிறுக நம்மனதில் சேர்த்துக்கொண்டே வரும்போது, தெய்வ நிலையை உணர்வதற்கான வாய்ப்பு உருவாகும். இறைநிலையை பற்றிய புரிதலும் தெளிவும் நமக்கு இருந்தால்தான் அதனோடு ஒன்றி கலக்க முடியும். இதற்கு இறைநிலை தவம், உடற்பயிற்சி, காயகற்பம், தற்சோதனை இவையெல்லாம் பேருதவியாக அமைகிறது. மீண்டும் மீண்டும் இறைநிலை தவத்தை செய்துவர இறை நிலைக்கும் நமக்குமான புரிதலும் தெளிவும் நமக்குள் நாளுக்கு நாள் மேலோங்கும்.
🔮 *இன்றைய பண்புப்பயிற்சி*
🔮 விருப்பு, வெறுப்பு, போட்டி, பொறாமை, பொருள் பற்று, அதிகாரப் பற்று இவை எல்லாம் இல்லாதவன் அவன். அவனோடு இணைய முயற்சிப்பவர்களுக்கும் இக்குணங்கள் எல்லாம் இருக்கக் கூடாது. மேலும் இக்குணங்களை வைத்துக் கொண்டு அவனோடு இணைவது என்பது எக்காலத்திலும் எவரொருவருக்கும் சாத்தியமே இல்லை. விட்டுக்கொடுத்தல், தியாகம், அனைத்து உயிர்களின் பால் அன்பும் கருணையும் உள்ளடக்கமாகக் கொண்ட தாகும் சுத்தவெளி. இப்பண்புகளை எல்லாம் சிறுகச் சிறுக நமதாக்கிக் கொண்டு நமக்கான வாழ்வை வாழ்வோம்... நாமும் நம் குடும்பமும்... வாழ்க வளமுடன்...
🔮 *இன்றைய மூலிகை*
🔮 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🔮 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🔮 *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔮 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔮 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔮 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment