நித்தியக்கடன் ஆகஸ்ட் 04 2020

🌀💥🌀💥🌀💥🌀💥🌀💥🌀

வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 04

🌀💥🌀💥🌀💥🌀💥🌀💥🌀

🎱 இன்றைய நித்தியக்கடன்

🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🎱 இன்றைய சாதகம்

🎱 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

🎱 இன்றைய நற்சிந்தனை

🎱 திருக்குறள்:- "பிறப்பு ஒக்கும் எவ்வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" இறப்பு என்பது இந்த பூமியில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் ஒன்றுதான். ஆனால் ஒவ்வொரு ஜீவனுக்கும் சிறப்பு என்பது தனித்தனியாகவே அமைந்திருக்கிறது. அதனிலும் மனிதனுக்கு அமைந்துள்ள சிறப்பு மிகவும் போற்றத்தக்கது, மதிப்புடையது. இந்த மனித பிறப்பினால் மட்டும்தான் இறைவனின் தன்மையை, இயக்கத்தை, சிறப்பை  உணர்ந்து கொள்ள முடியும். இந்த சிறப்பு மனிதப் பிறப்பிற்கு மட்டுமே அமைந்ததாகும்.

🎱 இன்றைய தற்சோதனை

🎱 ஏதேனும் ஒரு சிறு வகையில் எல்லா வகையான ஜீவன்களுக்கும் சிறப்பு என்பது இருக்கிறது. இந்த மனிதனுடைய சிறப்பு தன்னைத்தானே உணரத்தக்கது. தன்னுடைய நிலை, இயக்கம், மூலம் இவை அனைத்தையும் உணர்ந்து கொள்ளக்கூடிய சிறப்பு மனிதப் பிறப்பிடம், மட்டுமே அமைந்திருக்கிறது. இந்த சிறப்புமிக்க அமைப்பை எல்லா வகையிலும் தற்சோதனை  செய்து வாழ்க்கையை சீரமைத்து கொண்டு சிறப்பான உயர்வு காண்போம்.

🎱 இன்றைய பண்புப்பயிற்சி

🎱 எந்த ஒன்றையும் சரியாக உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொள்ளக்கூடிய பண்பில் உயர வேண்டும். இந்த பண்பில் உயர உயர நமக்கு நம்முடைய நிலைபாடும், அறிவின் தன்மையும் மனதில் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். எந்த ஒன்றையும் மறுமை இல்லாமல் நேர்நிறையோடு, உள்ளதை உள்ளவாறு உணரும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்..!

🎱 இன்றைய மூலிகை

🎱 சீரகம் இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🎱 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.

🎱 புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.

🎱 குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

🎱 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்

🎱 மேலும் விபரங்களுக்கு
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          🌸வாழ்க வையகம்🌸
    🍁வளர்க வேதாத்திரியம்🍁
          🌸வாழ்க வளமுடன்🌸

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments