🍂🌀🍂🌀🍂🌀🍂🌀🍂🌀🍂
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*செப்டம்பர் 01*
🍂🌀🍂🌀🍂🌀🍂🌀🍂🌀🍂
🎭 *இன்றைய நித்தியக்கடன்*
🎭 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🎭 *இன்றைய சாதகம்*
🎭 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🎭 *இன்றைய நற்சிந்தனை*
🎭 உருவநிலையில் மனிதர்களாகவும் மனோநிலையில் விலங்குகளாகவும், மனித பண்பிலும் விலங்கு பண்பிலும் மாறி மாறி கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த இரண்டினுடைய கலவையின் வெளிப்பாடுதான் நாம் சில சமயம் அமைதியாகவும், பலசமயம் வெறுப்புணர்வாகவும் உணருகின்றோம். இதுதான் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே ஓடி திரிந்து கொண்டிருக்கும் உணர்ச்சி வயப்பட்ட வாழ்க்கை முறையாகும்.
🎭 *இன்றைய தற்சோதனை*
🎭 நாம் எங்கே இருக்கிறோம், யாராக இருக்கிறோம், இனிவரும் காலங்களில் நாம் யாராக வாழ வேண்டும் என்ற தெளிவு, நம்மிடையே இருக்க வேண்டும். அப்போதுதான் எதிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு, எதனோடு இணைய வேண்டும் என்ற உண்மையை புரிந்துகொள்ள முடியும். இந்த முயற்சிக்கு நமக்கு தேவையானது எல்லாம் நாம் கடை நிலைக்கு சென்று சேரும்வரை விடாமுயற்சி, அதற்கான முறையான பயிற்சி. இவை தான் தேவை...
🎭 *இன்றைய பண்புப்பயிற்சி*
🎭 எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நம்முடைய பிறப்புக்கு உகந்த காரியத்தில், நம்மை இணைத்துக் கொண்டு எதை நம்முள் வளர்த்து கொள்ள வேண்டும், என்று தெளிவாக முடிவெடுக்க வேண்டும். மனதை முதலில் நிறுத்தி அமைதிப்படுத்தி பழகவேண்டும். அப்போதுதான் இந்த பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே ஓடுகின்ற ஓட்டம் நிற்கும். நீண்ட நெடுங்காலமாக நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். நின்று நிதானித்து நம்முள் நிலை பெறுவோம். நமக்குள் உள்ள நிலையான பொருளோடு இணைந்து வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🎭 *இன்றைய மூலிகை*
🎭 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🎭 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🎭 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎭 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎭 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎭 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment