வாழ்க வளமுடன்!
பக்தி யோகத்தில் இருக்கும் போது,ஆலய வழிபாடு செய்யும் போது, மூலவருக்கு (விக்ரகம்)கற்பூர ஆரத்தி காட்டும்போது, கண்ணாரக் காண வேண்டும்.தீப/ கற்பூர ஒளியில் இறை உருவத்தை மனதில் பதிய வைக்க வேண்டும். பின்னர் பிரகாரத்தை வலம் வந்து அமர வேண்டும்.அங்கு கட்டப்பட்டிருக்கும் தியான மண்டபத்தில் அமர்ந்து, முன் கண்ட இறை உருவத்தை நினைத்துத் தவம் செய்ய வேண்டும்.இது நம் ஆற்றலைக் கூட்டும். எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் மனதால் நினைத்தால் இறை உருவம் அகக் காட்சியாய் வரும். இறைவன் குடியிருக்கும் கோவிலுக்கு ஒப்பாக வங்கியையும், ATM மையத்திற்கு ஒப்பாக நம் மனத்தையும் கருத்தில் கொள்ளலாம். வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் வங்கியிலும் எடுக்கலாம்;ATM மையத்திலிருந்த்தும் எடுக்கலாம். அதுபோலவே தான் இறையாற்றல் ஆலயத்திலிருந்தும், நம் மனத்திலிருந்த்தும் (இறைவனின் பிரதி இருக்கும் இடம்) பெறலாம். ஆனால் தவம் அவசியம்.பக்தியை உதாசீனப்படுத்தக் கூடாது.
பக்தியை விட ஞானம் பெரியது. பக்தியின் மூலம் ஞானப்பாதையை நோக்கி நடக்க வேண்டும்.
தவம் முழுமையாகச் செய்து அறிவை உணர்ந்து அதுவே தெய்வம் என்பதையும் உணர்ந்து தொண்டு செய்து இருவினை அறுத்து ஆனந்தத்துடன் அனுதினமும் வாழ்வோம். _நன்றி:பேரா.நாராயணன் ஐயா_
நன்றி! வாழ்க வளமுடன்!!
Comments
Post a Comment