தியானம் செய்து, தன்னையோ, கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?


தியானம் செய்து,  தன்னையோ, கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

 * தன்னையோ கடவுளையோ அறிந்த மனிதனுக்கு, தன்முனைப்பு என்னும் ஆணவம் அழிந்து அனைத்து உயிர்களையும் ஒன்றாக அறிந்த அன்பு மலர்ந்துவிடும்.

*தான் தனது என்னும் தன்முனைப்பு   அழிந்ததும் பேராசை, சினம் கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு தீயகுணங்களும் நிறைமனம், பொறுமை,ஈகை, கற்பு,சம உணர்வு, மன்னிப்பு ஆகிய ஆறு நற்குணங்களாக மாறிவிடும்.

*தனக்கும் பிறருக்கும் நல்லதைச் செய்து துன்பம் போக்கி இயற்கை இன்பங்களைத் துய்த்து வாழ்வதே வாழ்வின் நோக்கமும் என்பது விளங்கிவிடும். 

*  உடல்நலம் காக்கும் அறிவும்,   நிறை செல்வந்தராக வாழும் அறிவும், உறவுகளை மேம்படுத்தி உயர் புகழோடு வாழும் அறிவும் தெளிவாக விளங்கிவிடும்.

* தன்னை இறை நிலையாக உணர்ந்த மனம் நல்லதையே நினைக்கும். நினைப்பதும் நடந்துவிடும். ஆசைகளெல்லாம் நிறைவேறிவிடும்.
பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்ப ஆசைகளற்ற மனநிலையில் நிகழ்கால இன்பங்களைத் துய்த்து அமைதியாக வாழலாம்.

தியானம் செய்து தன்னையோ,கடவுளையோ எளிதாக அறியும் வழி?

*எளியமுறை உடற்பயிற்சியோடு  காயகல்ப பயிற்சியும் செய்து உடல்நலத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

துரியம் வரை அகத்தவம் செய்து, 
* வாழ்வின் நோக்கத்தையும் வாழ்க்கைத் தத்துவம் பன்னிரண்டையும் அகத்தாய்வு செய்து தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

* எண்ணம் ஆராய்தல் பயிற்சி செய்து தனக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் நல்ல எண்ணங்களையே மனதில் வைத்திருக்க பழக வேண்டும்.

* ஆசை சீரமைத்தல் பயிற்சி செய்து, தேவையான ஆசைகளை திட்டமிட்டு நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

* சினம் தவிர்த்தல் பயிற்சி செய்து சினம் தவிர்த்து பழக வேண்டும்.

* கவலை ஒழித்தல் பயிற்சி செய்து வாழ்க்கைச் சிக்கல்களுக்கு தீர்வுகண்டு வாழ வேண்டும்.

* துரியாதீததவம்செய்து, நான் யார்? என்னும் கேள்வியை எழுப்பி விடைகாண வேண்டும்.
நான் உடலா? உயிரா?மனமா? என்று ஆராய்ந்து தன்னை அறிய வேண்டும்.

தன்னை அறிந்தவன் கடவுளை அறிவான்.
கடவுளை அறிந்தவன் கடமையில் வாழ்வான்.
கடமையைச் செய்பவனே இன்புற்று வாழ்வான்.

தியானம் செய்து தன்னையோ கடவுளையோ அறியும் கலையே மனவளக்கலை (SKY)யோகா.
வாழ்க வளமுடன்

Comments