வாழ்க வளமுடன்!
*தவமும் அறமும்* இரயில் தண்டவாளம் போன்றது.
தவத்தில் ஆழ, அறச்செயல்கள் தானே மிளிரும்.
அறச்செயல்களைச் சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றால், தவம் புரிந்தவராகவே இருப்பர்.
இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது.
*தவம்*
"உயிரின் மேல் நிலைப்பது."
சிற்பி ஒருவர் சிலையை வடித்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பலரும் பாராட்ட அவர் கூறுகிறார்." கல்லில் சிலை ஏற்கெனவே உள்ளது. கல்லில் உள்ள வேண்டாத பகுதியை மட்டுமே நான் நீக்கினேன்."
அவ்வாறே நம்முள் தெய்வத்தன்மை ஏற்கெனவே உள்ளது. அதனை மும்மலங்கள் மறைத்துள்ளன. மும்மலங்கள் என்ற வேண்டாத குணங்களை *தவம்* கொண்டு நீக்குவது போதுமானது.
* *தவத்தின் பயன்கள்**
1)உள்ளுணர்வு மிகும்
2)புறமனதுக்கு எட்டாத கருத்துகள் புலப்படும்.
3) மும்மலங்கள் நீங்கும்.
4)அறிவு மெய்ப்பொருளாகும்.
5) பழக்கத்தின் வந்த பதிவு நீங்கும்.
6)தான், குடும்பம்,சுற்றம், ஊரார், உலகோர்க்கு ஆற்ற வேண்டிய *கடமைகளை* ஒழுங்காகச் செய்வர்.
7)பகைவர் எவரும் இருக்க மாட்டார்.
8) யாரையெல்லாம் விரும்புகிறார்களோ ( குடும்ப உறவுகள், நட்பு வட்டம்)அவர்கள் உயர் நிலைக்குச் செல்வர்.
9)துன்பங்கள் பல வந்து நம்மைப்பண்படுத்தும். இதனால் பழிச்செயல் பதிவுகள் நீங்கும்.
10)எமன் கூட நெருங்க அஞ்சுவான்.
*அறம்*
ஒழுக்கம், கடமை,ஈகை மூன்றும் சேர்ந்ததே.
நம் மக்களுக்கு ( குழந்தைகளுக்கு) நாம் சேர்த்து வைக்க வேண்டியவை பொருள் அல்ல. அறச்செயல்கள் செய்து அதன் மூலம் வரும் புண்ணியங்களையே.
அரை மணி நேரத் தவம் ஒரு நாளில் மீதமிருக்கும் 23 1/2 மணிநேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிட உதவும். அதே நேரத்தில் 23 1/2 மணி நேரச் செயல்பாடுகள் தான் அரை மணி நேரத் தவத்தில் ஆழ்ந்து செல்ல உதவும். இல்லையெனில் கவலைகளும், சினங்களும் தொடர்ந்து நம்மை தவத்தில் ஆழ்த்தாமல் அலைகழிக்கும்.
எடுத்துக்காட்டாக,
கோபம் வருகிறது என்றால் தவம் ஒழுங்காகச் செய்யவில்லை என்று பொருள்.
கோபம் இருந்தால் தவத்தில் இருக்க முடியாது என்பதும் உண்மை.
தவம் செய்து அறவாழ்வு வாழ்வோம். _
*_நன்றி: பேரா.பெருமாள்_ ஐயா_*
நன்றி! வாழ்க வளமுடன்!!
Comments
Post a Comment