🔮🎲🔮🎲🔮🎲🔮🎲🔮🎲🔮
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூலை 29*
🔮🎲🔮🎲🔮🎲🔮🎲🔮🎲🔮
🍁 *இன்றைய நித்தியக்கடன்*
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🍁 *இன்றைய சாதகம்*
🍁 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🍁 *இன்றைய நற்சிந்தனை*
🍁 இந்த பூமியில் பிறந்திருக்கும் ஒவ்வொரு தனிமனிதனும், தன்னிலை விளக்கம் பெறுவதற்காகவே பிறந்திருக்கிறோம். இந்த தன்னிலை விளக்கமானது தெளிவாக எந்த குறைபாடும் இல்லாமல், முழுமையாக வேதாத்திரி மகரிஷி அவர்களால் விளக்கப்பட்டு இருக்கிறது. மகரிஷி அவர்கள் நம்மிடையே சில பொறுப்புகளையும், கடமைகளையும் கொடுத்திருக்கிறார்கள். கேட்ட உண்மைகளை கேட்டவாறு உயிரிலும் மனதிலும் அப்படியே வைத்திருக்கக்கூடாது, அவைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
🍁 *இன்றைய தற்சோதனை*
🍁 இனிமேல் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்... இந்த விளக்கத்தை எவரெல்லாம் தன்னுடைய கடமையாகவும், பொறுப்பாகவும், ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்குள்ளாக இறைநிலை தன்மை முதலில் மேலோங்கத் துவங்கும். விளக்கத்துக்கும் பழக்கத்திற்கும் இடையே போராடாமல் உடல்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளை நாள் தவறாமல் செய்துவர பருவுடல், நுண்ணுடல், காந்த உடல் இந்த மூன்று உடல்களிளும் வலிமை பெருகும். இதன் விளைவாக விளக்கத்தின் வழியே வாழக்கூடிய மனோதிடமும் மன அமைதியும் உருவாகும்.
🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍁 அதன் பின்னரே "நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன். துன்பப்படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்." இந்த இரண்டொழுக்க பண்பாடும் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இந்த தீய குணங்களை எல்லாம் முறையாக மாற்றி அமைத்துக்கொண்டு நிறை மனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமநேர்உணர்வு, மன்னிப்பு என்ற பண்புகளாக மாற்றி அமைத்துக் கொண்டு நம்முடைய பொறுப்புக்களையும், கடமைகளையும், செவ்வனே செய்து வர இறைஞானம் உதயமாகும் கருமையத்தில் இருந்து... வாழ்க வளமுடன்...
🍁 *இன்றைய மூலிகை*
🍁 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🍁 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🍁 *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍁 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍁 * மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment