நித்தியக்கடன் 27.07.2020

〽🌴〽🌴〽🌴〽🌴〽🌴〽

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூலை 27*

〽🌴〽🌴〽🌴〽🌴〽🌴〽

🌵 *இன்றைய நித்தியக்கடன்*

🌵 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🌵 *இன்றைய சாதகம்*

🌵 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

🌵 *இன்றைய நற்சிந்தனை*

🌵 நம்முடைய வாழ்க்கை சூழ்நிலையில் எந்த ஒன்றையும் கடக்க வேண்டுமானால், நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் யார்? அது என்ன? அதற்கும் நமக்குமான நட்பு என்ன? நாம் ஏன்  அதை பின் தொடர்கிறோம்? அல்லது அது நம்மை பின் தொடர்கிறதா? என்று பலவாறாக கேள்விகளை உங்களுக்குள்ளாக கேட்டு புரிந்து கொண்ட நிலையில், எடுக்கக்கூடிய முடிவே நிலையானதாகவும் இறுதியானதாக  இருக்கும். கேள்விகளை நீங்கள் தான் கேட்க வேண்டும். கேள்வி கேட்டால்தான் விடை கிடைக்கும்.

🌵 *இன்றைய தற்சோதனை*

🌵 போகிறபோக்கில் ஒரு முடிவை எடுத்து, அந்த முடிவை நடைமுறை படுத்த முடியுமா என்றால், பல நேரங்களில் பல சூழ்நிலைகளில் இது சாத்தியமே கிடையாது. நம்முடைய அறிவையும் மனதையும் விரிந்து, பரந்த, ஆழ்ந்த நிலையோடு இணைத்துக்கொண்டு அதற்கு பின்னால் நாம் எடுக்கும் முடிவு தான் சரியானதாகவும் இறுதிவரை பின்பற்றக் கூடியதாகவும் அமையும்.

🌵 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌵 நிலையான பிரம்மத்தோடும் இறைநிலையோடும் மனதை இணைத்து அதுவாகி கொண்டு, எப்போதும் அதுவாகவே வாழும் பண்பில் உயர்வு காண வேண்டும். ஏனெனில் வினை பதிவோடு இந்த சரீரத்தை நாம் பெற்றுள்ளோம். இந்த வினைப் பதிவுகளை எல்லாம் முறைப்படுத்திக் கொண்டு, இறைநிலையோடு இணைவதற்கு உரிய செயல் பண்பு நம்மிடையே நடைமுறை வாழ்க்கையில் தேவை. அப்போதுதான் எண்ணங்களின் வகை தெரிந்து கொண்டு, அவைகளை இயல்பான நிலையில் பழக்கவும் உயர்த்தவும் முடியும். வாழ்க வளமுடன்...

🌵 *இன்றைய மூலிகை*

🌵 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🌵 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🌵 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🌵 *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌵 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌵 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌵 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments