இன்றைய
நித்தியக்கடன்
🍃 அதிகாலை எழுந்து
நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள்
இனிய நாளாக.
🍃 இன்றைய சாதகம்
🍃 ஞாயிற்றுகிழமை
காலை:-
பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:-
இறைநிலை தவம்.
🍃 இன்றைய நற்சிந்தனை
🍃 உடலின் எல்லாப்
பாகங்களையும் நன்கு அசைத்து இயக்கி
பழக்குங்கள். ஒவ்வொரு உள்ளுறுப்பின் மீதும்
கவனம் செலுத்துங்கள். மனம் எங்கே செலுத்தப்படுகிறதோ
அங்கு காந்த சக்தி குவியும்
என்கிற இயற்கை அமைப்போடு, இந்த
முறையான பழக்கவழக்கம் உடல் ஆரோக்கியத்தை மேலும்
மேலும் பெருகச் செய்யும். உடலில்
உள்ள எல்லா உள்ளுறுப்புகளும் நன்றாக
இயங்கும். ரத்த ஓட்டம், வெப்ப
ஓட்டம், காற்றோட்டம் இந்த மூன்றும் சீராக
இயங்குவதற்கும். உடல் நலம், மனவளம்,
உயிர் வளம் இவை யாவும்
சிறப்பான முறையில் அமைவதற்கும் பேருதவியாக இப்பயிற்சி அமைகிறது.
🍃 இன்றைய தற்சோதனை
🍃 உடல் நலத்திற்கான
செயல்கள் இருந்தால் தான் உடல் நன்றாக
இருக்கும். உணவு, உழைப்பு, உறக்கம்,
உடலுறவு, எண்ணம் இந்த ஐந்திலும்
அளவு முறையை பின்பற்றும் போது
தான் பருவுடலுக்கும், நுண்ணுடலுக்கும், காந்த உடலுக்கும் உண்டான
கோட்பாடுகள் பாதுகாக்கப்படும். இவைகளின் நுட்பமான இயக்க அமைப்பில் தான்
மெய்ஞானம் உயர்வு பெறுகிறது. இதனை
தற்சோதனைக்கு எடுத்துக்கொண்டு ஐந்தில் அளவு முறை
பின்பற்றும்போது மெய்ஞானம் மேலோங்குவதை உள்ளுணர்வாய் உணர்வோம்.
🍃 இன்றைய பண்புப்பயிற்சி
🍃 ஒரு கட்டமைப்புக்குள்
நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்ள
வேண்டும். இந்த ஒழுங்கமைப்பு தான்
நம்மை இறை நிலையை நோக்கி
நகர்த்தக்கூடிய தன்மையாகும். இந்த தன்மையை நமக்குள்
ஊக்குவித்துக்கொண்டு இதன் விஞ்ஞான உண்மைகளை
எல்லாம் உள்ளுணர்வால் உணர்வோம். மனதை எப்போதும் பேரானந்த
நிலையில், நிலைநிறுத்த தினந்தோறும் உடற்பயிற்சி செய்யும் பண்பை ஒழுக்கத்தை உருவாக்கிக்
கொள்வோம். வாழ்க வளமுடன்...
🍃 இன்றைய மூலிகை
🍃 துளசி தேவையான
பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர்
– 2 கப்
டீத்தூள்
– 2 டீஸ்பூன்
நாட்டு
சர்கரை – தேவையான அளவு
🍃 செய்முறை
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு
கொதிக்க விட்டு பின் அடுப்பைக்
குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை
விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு
2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி
தேநீரைதயார்.
🍃 புகுவினையின் மீது
கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை
வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும்
வேண்டாம். இதற்கு துரிய தவம்
உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது,
மாது, சூது, வஞ்சம், இலஞ்சம்
தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள்
உதவும்.
🍃 குறிப்பு:- இந்நித்தியக்கடனை
கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு
சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட
விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍃 “யாம் பெற்ற
இன்பம், பெருக இவ்வையகம்” இரவு
உறங்குவதற்கு முன் சாந்தி தவம்
கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க
வையகம்! வாழ்க வையகம்! வாழ்க
வளமுடன்! என்று மூன்று முறை
வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்
**
அவன் தேவனாம்
பலமுறை
வாசித்து பொருளறிந்தவன்
நன் படைத்தற் பிரமனாம்
பரப்புபவன்
காத்தற் கடவுளாம்
தன்னிற்
வெளிப்படுத்துபன் பரமனாம்
இம்முதற்
கடைப்பிடித்தால்
இடைமுத்த
சிவமாஞ் சத்தியமே...
சித்தாட்சர
மருத்துவம்:
அட்சரங்களின்
பயனும் அவை நின்றியங்கும் தலமும்...
Comments
Post a Comment