*வேதாத்திரிய ஆத்திசூடி*
*எளிமையாய் இருந்திடு*
நடை உடை எதுவாகிலும் எளிமை அவசியம்.
எதைச் செய்தாலும் நம்பிக்கையுடன் இருங்கள்.
"வறுமை வந்தால் வாடக் கூடாது. வசதி வந்தால் ஆடக்கூடாது" என்பார்கள்.
எளிமை இனிமையைத் தரும். நேர்மையுடன் வாழ வைக்கும். பிறருக்கு உதவும் குணத்தை வளர்க்கும். "தேவையும் பொருட்களும் அறிவும் சமம் கொள்வோம்" என்பார் மகரிஷி.
எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாது வாழ்வோம்.
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினாலும் எளிமையோடு வாழ்ந்தவர்கள் மக்கள் மனதில் நீங்காது போற்றப்படுகிறார்கள்.
*ஏற்றம் போற்றிடு*
எளிமை இருப்பின் ஏற்றம் தானே வரும். வானில் கோள்களின் அமைவிடமானது அதனதன் நிறை, அடர்த்தி, அழுத்தம் ஆகியவற்றிற்கேற்ப அமைந்துள்ளது. நம் வினைப் பயனுக்கேற்பவே நம் நிலையும் அமைந்துள்ளது என்பதை உணர்ந்து வாழ்வோம்.
*ஐயம் தெளி*
சந்தேகம் தேகத்திற்கும் நல்லதல்ல.சந்தேகம் தெளிய _தவம்_ அவசியம். தவத்தில் அமரும் போது உள்ளெழுந்த வினாக்களுக்கான விடைகள் கிடைக்கப் பெறும். தவத்தின் போது இல்லாவிட்டாலும் விடையானது விரைவில் பிறர் மூலம் கிடைக்கப் பெறும். பிரபஞ்சத்திடம் வலுவாக கேட்கும் போது விடை கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தரும்.
ஐயம் தெளிந்தால் மட்டுமே மேல் நிலைக்குச் செல்ல இயலும்.
நன்றி! வாழ்க வளமுடன்!!
அருள்நிதி.எம்.பிரேமா
அசனமாப்பேட்டை தவமையம்.
Comments
Post a Comment