*வாழ்க வையகம்* *வாழ்க வளமுடன்*
*வளர்க வேதாத்திரியம்*
🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹
*உலகப் பொது அருள்நெறி சமய ஆண்டு : 35*
*ஜூன் 29 / 06 / 2020 திங்கள்*
🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹
*இன்றைய சிந்தனை*
*அமைதி நிலைக்க*
🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹
*"உயிரினங்கள் எல்லாவற்றிலும் மனிதன் சிறந்தவன். பிறர்படும் துன்பத்தைக் கூர்ந்துணரும் நுண்ணறிவு மனிதனுக்கே சிறப்பாக அமைந்துள்ளது. வருந்துவோர்களிடம் இரக்கம் கொண்டு உதவி வாழும் தகைமை மனிதனுக்கே உண்டு. வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் பல. எனினும் அவற்றை விரைவாகவும் எளிதாகவும், பெருத்த அளவிலும் உற்பத்தி செய்து கொள்ள ஏற்ற இயந்திர விஞ்ஞான அறிவிலும் நாளுக்கு நாள் மனிதன் முன்னேறிக் கொண்டு வருகிறான்.*
*எனினும் மனித சமுதாயத்தில் ஏன் அமைதி இல்லை. மனிதரிடையே அச்சம், பிணக்கு, பகை, போர் இவை ஏன் அடிக்கடி ஆங்காங்கு எழுகின்றன. வாழ்வைச் சீர்குலையச் செய்கின்றன. மனித மன இயல்பையும் விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு சிந்தித்தே இதற்கு முடிவு காண வேண்டும்.*
*மனிதனுக்கு நான்கு வித தேவைகள் உண்டு.*
*1) உணவு, உடை, உறைவிடம், பருவத்தே பால் உறவு, இவை காலத்தோடும், தேவை நிறைவு பெரும் அளவிலும் கிடைக்க வேண்டும்.*
*2) பலவாறாக அமைந்த இயற்கை அழகுகளையும் காட்சிகளையும் கண்டு களிக்கும் வாய்ப்பு வேண்டும்.*
*3) இயற்கை இரகசியங்களை அறியவும், பிறர்க்கு உணர்த்தவும் வாய்ப்பும் சூழ்நிலையும் வேண்டும்.*
*4) பிரபஞ்ச இயக்கத்திற்கும் தனக்கும் மூல ஆற்றலை அறிய வாய்ப்பும் சூழ்நிலையும் வேண்டும்.*
*காலத்தோடும் முறையோடும் தேவைக்கேற்ப இந்நான்கு வகையும் கிட்டாத போது அவன் அறிவு, உடல் ஆற்றல்கள் திசை மாற்றம் பெறுகின்றன. போட்டியுணர்வும், பிறர் வளம் பறித்து வாழும் பழிச் செயல்களும், பாதுகாப்புப் பொறுப்பும் மிகுதியாகின்றன. அச்சம், பகை, பிணக்கு, போர், இவையாக உருப் பெறுகின்றன. இத்தேவைக்குரிய பொருட்களையும் வசதிகளையும் ஈட்டவும், காக்கவும், துய்க்கவும், பிறர்க்கு உதவவும் உலகில் பிறந்த எல்லோருக்கும் உரிமையுண்டு. இதுவே பிறப்புரிமை எனப்படும்.*
*இந்த உரிமையை பிறர் தடுக்காமலும், பறிக்காமலும் காக்க அமையும் சமுதாயப் பாதுகாப்புச் சூழ்நிலையே சுதந்திரம் ஆகும். உலகில் வாழும் மக்கள் எல்லோருக்கும் இந்தத் தெய்வீகமான பிறப்புரிமையும், சுதந்திரமும் ஒவ்வொருவருக்கும் கிடைத்தால் தான், உறுதி செய்யப்பட்டால் தான் மனிதன் வாழ்வில் அமைதி கிட்டும். அது நிலைக்கவும் முடியும்."*
*வாழ்க வளமுடன்*
🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹
*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்*
*வேதாத்திரி பதிப்பகம்*
*இருபத்தி இரண்டாவது பதிப்பு நவம்பர்*
*2015 - -ன் படி வெளியிடப்படுகின்றது.*
*உலக மக்கள் அனைவரும் நலமோடும்*
*வளமோடும் வாழ்வதற்குத் தவத்தில்*
*வாழ்த்துவோம்.*
🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹
Comments
Post a Comment