வேதாத்திரிய ஆத்திசூடி 26.06.2020

*வேதாத்திரிய ஆத்திசூடி*
 *உடற்பயிற்சி செய்*
இறைவனின் அற்புத படைப்பு மனிதன். "உடலினுள்ளே உறுபொருள் கண்டேன்" என்கிறார் திருமூலர்.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளைக் கற்றுக் கொள்வது புறவாழ்க்கையின் உயர்வுக்கு உதவும். அக வாழ்க்கை நன்றாக அமைய உடலின் மொழி அறிதல் அவசியம். உடலின் மொழி என்பது உடலைப் புரிந்து கொள்ளுதல் ஆகும். அதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்.பார்க்காத பயிர் பலன் தருமா? நம் உடல் நலனைப் பேணாது சாதித்தல் என்பது  தான் இயலுமா?   சிந்திப்பீர்! இறைநிலை நோக்கிய பயணத்தில் வெற்றி பெற உடல் நலன் காக்க உடற்பயிற்சி அவசியம். விலங்கினப் பதிவுகளைப் போக்கவும் உடற்பயிற்சி தேவை.
 *ஊக்கத்துடன் உழை*
"என் உழைப்பின் மூலம் வாழ்க்கையை நடத்துவேன்" என்பது மகரிஷி கூற்று.
5  இன் அளவு முறை காத்தலில் _உழைப்பும்_ ஒன்று. உழைத்து
தர்மத்துடன் பொருளீட்ட வேண்டும். "வெற்றி பெறும் வரை குதிரையைப் போல் ஓடு. வெற்றி பெற்றவுடன் குதிரையை விட வேகமாக ஓடு" என்பதை நினைவில் கொண்டு உழைத்து வாழ்வோம்."ஊக்கு விற்பவனைக் கூட ஊக்குவித்தால் தேக்கு விற்பான்" என்பது முன்னோர் மொழி.நம்மை நாமே உற்சாகப் படித்துக் கொண்டு உழைப்போம். தோல்வி தரும் பாடத்தைக் கற்றுக் கொண்டு வெற்றி என்பதைப் பெற்றுக் கொள்வோம்.( நம் பெயரை நாமே சொல்லி சூப்பர் பிரேமா! சிறப்பாக செய்தாய்! அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று சுய ஊக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். இது சிறந்த பலனைத் தரும்.)
நன்றி! வாழ்க வளமுடன்!!
அருள்நிதி.எம்.பிரேமா.
அசனமாபேட்டைத் தவமையம்.

Comments