*வேதாத்திரிய ஆத்திசூடி*
அறம் செய விரும்பு
ஆறுவது சினம்...
இது *ஒளவை* சொன்ன ஆத்திசூடி..
அனைவரும் அறிந்திருப்பர் இத்தொடர்களை..
நம் *குரு* சொன்ன ஆத்திசூடியில் முதல் _இரண்டு_ அடிகளைப் பார்ப்போம் இன்று..
*அன்பாய் இரு*
அன்பாய் இருந்தால் பண்பு வரும். அன்பு எப்போது வரும்?
நம்முள் இறைநிலை மலரும் போது பூரணமாக வெளிப்படும். அன்பை விதைத்தால் ஆணவம் ஒழியும்.
தன் உயிர் போல் பிற உயிர்களையும் நேசிப்பர்.
"அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்பார் வள்ளுவர்.
அன்பை விதைத்து அன்பைப் பெறுவோம்.
*ஆசையைச் சீரமை*
ஆசையால் சினம் தோன்றிடும்.சினத்தால் வருத்தம் தான் வரும். திருத்தம் வராது. ஆசை பேராசையாகும்.
நாம் பிறவி எடுத்த நோக்கம் நிறைவேறாது. ஆசைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே கடவுளுக்கும் நமக்கும் உள்ள தூரம் அமைகிறது. நிறைவேறாத ஆசைகளின் கூட்டம் நம்மை மறு பிறப்பிற்கு இட்டுச் செல்லும். இப்பிறவியில் வருத்தம் கலந்த வாழ்வைத் தரும்.. இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழப் பயில வேண்டும்.
அகத்தாய்வு பயிற்சியின் போது ஆசையைச் சீரமைத்தல் பயிற்சி செய்தோம் அல்லவா?
அதை அன்றாடம் ஒவ்வொரு ஆசை எழும் போதும் சீரமைக்கலாம். நேரம் இல்லாதவர்கள் தூங்கச் செல்லும் முன் அன்றைய நிகழ்வுகளை அசை போட்டு நம்முள் திருத்தம் மேற்கொள்ள வேண்டியவை குறித்து பரிசீலனைச் செய்யலாம்.
இதனால் தெளிவு கிடைக்கும். பிறிதொரு சூழலில் சிறப்பாக செயல்படத்தக்க விழிப்புணர்வு கிட்டும்.
நன்றி! வாழ்க வளமுடன்!!
அருள்நிதி.எம்.பிரேமா.
அசனமாப்பேட்டை தவமையம்.
Comments
Post a Comment