நித்தியக்கடன் 30.06.2020

🅾🌴🅾🌴🅾🌴🅾🌴🅾🌴🅾

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூன் 30*

🅾🌴🅾🌴🅾🌴🅾🌴🅾🌴🅾

🎨 *இன்றைய நித்தியக்கடன்*

🎨 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🎨 *இன்றைய சாதகம்*

🎨 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், 
மாலை:- இறைநிலை தவம்.

🎨 *இன்றைய நற்சிந்தனை*

🎨 சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் இது நம் வாழ்வின் எல்லாவற்றிலும் தேவை. காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு நம்முடைய தேவைகளையும், பழக்கவழக்கங்களையும் சீரமைத்துக் கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மீக சிந்தனையோடு நம் வாழ்வை சிறப்பாக வாழ்வதற்கு சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் மிகவும் முக்கியமானது.

🎨 *இன்றைய தற்சோதனை*

🎨 எண்ணம், சொல், செயல் மூன்றையும் ஒழுங்கு செய்து கொள்வது மிகவும் அவசியமாகும். எண்ணம், சொல், செயல் மூன்றிலும் சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் இதனை கடைபிடித்தால்தான் நமக்கான  வாழ்வை நாம் வாழ்வதற்கு தயாராவோம்.

🎨 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎨 நம்முடைய கருமையத்திற்கு பொருத்தமில்லாமல் எந்த ஒரு வாழ்க்கை சூழ்நிலையும் நமக்கு அமைவதும் கிடையாது, அமையப் போவதும் கிடையாது. இதனை நன்றாக சிந்தித்து உணர்ந்து கொண்டு, எப்போதும் அயராவிழிப்பு நிலையில் இருக்கும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...

🎨 *இன்றைய மூலிகை*

🎨 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🎨 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🎨 *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎨 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎨 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎨 * மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments