நித்தியக்கடன் 29.06.2020

🍀❄🍀❄🍀❄🍀❄🍀❄🍀

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூன் 29*

🍀❄🍀❄🍀❄🍀❄🍀❄🍀

♣ *இன்றைய நித்தியக்கடன்*

♣ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

♣ *இன்றைய சாதகம்*

♣ திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, 
பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

♣ *இன்றைய நற்சிந்தனை*

♣ இறை நீதிக்கு முரண்பாடு இல்லாமல் முதலில் நம்மை நாம் ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். இந்த நீதியின் அடிப்படையில் நம்முடைய எண்ணம், சொல், செயல்களை திட்டமிட்டு எப்போதும் விழிப்பு நிலையோடு இருந்து செயலாற்ற வேண்டும். இறைநீதி என்பது தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, துன்ப விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் தனது எண்ணம், சொல், செயலை பயன்படுத்துதலே ஆகும்.

♣ *இன்றைய தற்சோதனை*

♣ இந்த நீதிக்கு முரண்பாடான மற்றவர்களுடைய எண்ணத்தை, செயலை, பேச்சுக்களை அவர் அவர்களிடமே விட்டு விடலாம். அவைகளை தூக்கி சுமந்து கொண்டு நாம் துன்பப் பட வேண்டிய அவசியம் இல்லை. உறவுகளிடையே நல்லதொரு நட்பும், நீதிநெறியும், காப்பாற்றப்பட வேண்டுமானால் இந்த இறை நீதியை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் போதுமானது. மற்றபடி இதற்கு முரண்பாடான கருத்துக்கள் உருவாகும் போது, அதை அவர் அவர்களிடமே விட்டு விடலாம்.

♣ *இன்றைய பண்புப்பயிற்சி*

♣ தான் நீதி பிறழாது வாழ்வது பிறருடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பதைவிட, மிகவும் முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் செய்வது நியாயமாகவே கருதப்படுகிறது. ஏனெனில் அவர்களுடைய கருவமைப்பு, தன்மை, அறிவின் உயர்வு இதற்கு தக்கவாறுதான் அவர்கள் அந்த செயல்களைச் செய்கிறார்கள். இறைநீதி என்னவெனில் தான் பிழையில்லாமல் சீரான அறிவு உயர்வோடு வாழ்வதே ஆகும். இந்த பண்பில் அனைவரும் விழிப்பு நிலையோடு இருந்து உயர்வோம். வாழ்க வளமுடன்... 

♣ *இன்றைய மூலிகை*

♣ *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

♣ அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

♣ இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

♣ *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

♣ *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

♣ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

♣ * மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments