நித்தியக்கடன் 27.06.2020

🔮🎄🔮🎄🔮🎄🔮🎄🔮🎄🔮

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூன் 27*

🔮🎄🔮🎄🔮🎄🔮🎄🔮🎄🔮

☀ *இன்றைய நித்தியக்கடன்*

☀ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

☀ *இன்றைய சாதகம்*

☀ சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.

☀ *இன்றைய நற்சிந்தனை*

☀ மனிதர்களுடைய மனம் அவசரம், அறியாமை, சோம்பல், விளையாட்டு, விபரீதம், மயக்க உணர்ச்சிகள் போன்ற பல சுபாவங்களோடு இருக்கக்கூடியது. சில சுபாவங்கள் உள்ளடங்கி இருக்கும். சில சுபாவங்கள் மேல்நிலையில் ஆதிக்கம் செலுத்தும். இந்த சுபாவங்களுடைய ஆதிக்கத்தை புரிந்துகொண்டு அவற்றை சமமாக வைத்துக்கொள்வதற்காக, நாம்  மனதோடு எப்போதும் போராட வேண்டி இருக்கிறது. இந்த போராட்டத்தில் பெரும்பாலும் மனமே வெற்றி பெறுகிறது. தற்காலத்தில் என்ன ஒரு ஆறுதல் என்றால்... மனவளக்கலை பயிற்சியின் துணையோடு நாம் இதனை வெற்றி காணமுடியும். முறையான இந்த  யோகப் பயிற்சியைக் கொண்டு மனதை வெல்வதற்கான யுக்திகளை பிரயோகப்படுத்தி வெற்றி காணமுடியும்.

☀ *இன்றைய தற்சோதனை*

☀ அளவிடமுடியாத ஆற்றலும், திறமையும், செயல் திறனையும் உள்ளடக்கமாகக் கொண்டது அறிவு. மனதை அறிவோடு இணைத்துக் கொண்டு அதனுடைய முறை தவறிய செயல்பாடுகளில் இருந்து அவற்றை சீரமைக்கவும், ஒழுங்கு படுத்தவும், முறையான பயிற்சிகளை மேற் கொண்டால் மட்டும்தான் முடியும். தவம், தற்சோதனை, உடற்பயிற்சி, காயகல்பம் இந்த நான்கையும் பயன்படுத்தி மனதினுடைய பல்வேறு போக்கினை ஒரு முகப்படுத்தலாம்.

☀ *இன்றைய பண்புப்பயிற்சி*

☀ மனம் மிகவும் பலகீனமானது, அதேசமயம் அது மிகவும் பலம் வாய்ந்தது. பலவீனமாக இருக்கும் மனதை பலம்பொருந்திய மனதாக மாற்ற வேண்டுமானால் அதற்கு அறிவின் துணை கட்டாயம் தேவைப்படுகிறது. மனதையும் அறிவையும் ஒன்றிணைத்து கொண்டு வாழ்வதற்காகவே இந்த மனிதப் பிறவி அமைந்திருக்கிறது. ஆக மனதிற்கும் அறிவிற்குமான இணைப்பு பாலமாகும் போதும், அதற்கேற்ற பண்புகளை ஏற்றுக்கொள்ளும் போதும் மனதினுடைய சக்தி மகத்துவம் அனைத்தும் நமக்கும், சமுதாயத்திற்கும் முழுமையாக பயன்படும். வாழ்க வளமுடன்...

☀ *இன்றைய மூலிகை*

☀ *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

☀ இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

☀ *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

☀ *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

☀ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*


          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments