♣🔶♣🔶♣🔶♣🔶♣🔶♣
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூன் 25*
♣🔶♣🔶♣🔶♣🔶♣🔶♣
⁉ *இன்றைய நித்தியக்கடன்*
⁉ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
⁉ *இன்றைய சாதகம்*
⁉ வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
⁉ *இன்றைய நற்சிந்தனை*
⁉ மனிதர்களுடைய வாழ்க்கை ஞானேந்திரியங்கள் வழியாகவும் கர்மேந்திரியங்கள் வழியாகவும் நடைபெறுகிறது. ஞானேந்திரியங்கள் என்பது தோல், நாக்கு, மூக்கு, கண்கள், காதுகள் இவையே ஆகும். மேலும் புலன்களுக்கு ஞான கருவிகள் என்ற பெயரும் உண்டு. கர்மேந்திரியங்கள் என்பது கைகள், கால்கள், வாய், பாலுறுப்பு, ஆசனவாய் இவையே ஆகும். தொழில் கருவிகள், செயல் கருவிகள் என்ற பெயரும் உண்டு. இந்த கர்ம ஞான இந்திரியங்களை பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
⁉ *இன்றைய தற்சோதனை*
⁉ நம்முடைய பலமும் பலவீனமும் இந்த கர்ம ஞான இந்திரியங்கள் தான். இவைகளை நாம் சரியான முறையில் கையாள பழகிக் கொண்டால் அது நமக்கு எல்லா வகையிலும் நன்மைகளையே தரும். மாறாக இவைகளை சரியான முறையில் பயன்படுத்த தெரியவில்லை என்றால், அங்கே உடலிலும் மனதிலும் பலவிதமான நோய்த்தொற்றுகள் உருவாகும். ஜீவகாந்த செலவு, உயிர் துகள்கள் இழப்பு என அனைத்தும் நடைபெறும். தற்சோதனை செய்து இந்த இழப்புகளில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும். கர்ம ஞான இந்திரியங்களை விழிப்பு நிலையோடு பயன்படுத்துவோம்.
⁉ *இன்றைய பண்புப்பயிற்சி*
⁉ *பஞ்சேந்திரிய* தவத்தின் பயனாக ஞானேந்திரியங்கள் முறை படுத்தப்படுகின்றன. அவர்கள் அறிவின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கான வழித்தடங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த கர்ம ஞான இந்திரியங்களை சரியான புரிதலோடு பயன்படுத்தினால்தான், நாம் ஞானத்தை நோக்கி பயணிக்க முடியும். இந்த கர்ம ஞான இந்திரியங்கள் இல்லாமல், இவைகளை கடக்காமல், நாம் ஞானத்தின் கதவுகளை திறக்க இயலாது. ஞான கதவைத் திறக்கும் திறவுகோல் இந்த கர்ம ஞான இந்திரியங்களே ஆகும். வாழ்க வளமுடன்...
⁉ *இன்றைய மூலிகை*
⁉ *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
⁉ அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
⁉ *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
⁉ *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
⁉ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment