〽🌿〽🌿〽🌿〽🌿〽🌿〽
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூன் 24*
〽🌿〽🌿〽🌿〽🌿〽🌿〽
🍁 *இன்றைய நித்தியக்கடன்*
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🍁 *இன்றைய சாதகம்*
🍁 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🍁 *இன்றைய நற்சிந்தனை*
🍁 பொதுவாக மனிதர்களுக்குள் இருவேறுபட்ட சக்தி அமைப்புகள் இயங்குகிறது. ஒன்று மேல் நோக்கு விசை மற்றொன்று கீழ்நோக்கு விசை. இந்த இரு வேறுபட்ட விசைகளுடைய தன்மைகளும் வேறு வேறாகும். பெரும்பாலும் மனிதர்கள் கீழ்நோக்கு விசையில்தான் வாழ்வார்கள். இந்த நோக்கு விசையை துரிதப்படுத்த வேண்டும். மேலும் அதற்கான பயிற்சி முறைகளை மேற்கொள்ள வேண்டும். இப்பயிற்சியானது படிப்படியாக விசையை துரிதம் அடையச்செய்யும்.
🍁 *இன்றைய தற்சோதனை*
🍁 மேல்நோக்கு விசையானது உடல்நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம், விஞ்ஞானம் இவைகளை ஊக்கப்படுத்தும் விதமாக செயல்புரியும். கீழ்நோக்கு விசையானது பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம், போட்டி, பொறாமை, உண்ணுதல், உறங்குதல் போன்ற புலன் இன்பங்களை ஊக்கப்படுத்தும். தற்சோதனையின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையும் ஈடுபாடும் இந்த வேறுபாட்டைத் தெளிவாக நமக்கு உணர்த்தும்.
🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍁 குண்டலினி சக்தியை வலச்சுழலாக இயக்கும் போது அது மேல்நோக்கு விசைக்கு தயாராகும். பிரபஞ்சத்தைப் பற்றியும் இறை நிலை பற்றியும், ஆழமாக சிந்திக்க சிந்திக்க மேல் நோக்கு விசை அமையும். இறை ஞானத்திற்குறிய பண்புகளுக்கு நாம் நமக்குள் எவ்வளவு இடம் கொடுக்கிறோமோ, அவ்வளவு விரைவாக மேல் நோக்கு விசை துரிதமுடன் செயல்பட துவங்கும். "மனவளக்கலை" இந்த மேல்நோக்கு பயணத்திற்கு அன்போடு வேதாத்திரி மகரிஷியால் அருளப்பட்டதேயாகும். வாழ்க வளமுடன்...
🍁 *இன்றைய மூலிகை*
🍁 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
🍁 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
🍁 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
🍁 *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍁 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment