💸🚬💸🚬💸🚬💸🚬💸🚬💸
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூன் 23*
💸🚬💸🚬💸🚬💸🚬💸🚬💸
🔰 *இன்றைய நித்தியக்கடன்*
🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🔰 *இன்றைய சாதகம்*
🔰 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம்,
மாலை:- இறைநிலை தவம்.
🔰 *இன்றைய நற்சிந்தனை*
🔰 ஏதோ ஒன்றின் மீது நாமாக விருப்பப்பட்டோ அல்லது மயங்கியோ அதனை பின் தொடர்கின்றோம். இந்த பின்தொடர கூடிய சூழ்நிலைகளை நாம் தெரிந்தோ தெரியாமலோ, பல்வேறு வகையில் நம் வாழ்க்கையில் சந்திக்கிறோம். இது எல்லா நேரத்திலும் நன்மையை தரும் என்பதற்கு எந்தவிதமான உத்திரவாதமும் இல்லை. அமைதியான மனநிலையில் இவைகளையெல்லாம் ஆழ்ந்த சிந்தனைக்கு எடுத்துக் கொண்டு முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
🔰 *இன்றைய தற்சோதனை*
🔰 நாம் ஒன்றை எதனால் பின்தொடர்கின்றோம்? என்ன காரணத்தினால் இது அமைகிறது? நல்லதோ! கெட்டதோ! நாம் ஏதோ ஒன்றை பின்தொடர்ந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. இதிலிருந்து நாம் தப்பித்து வாழ முடியாது. ஆனால் நல்லவற்றை தேர்வு செய்து கொண்டு அதனை பின் தொடரலாம். அதில் எந்த தவறும் இல்லை ஆனால் எப்படி தேர்வு செய்வது. அந்த நல்லதை கண்டு கொள்வதற்காகத்தான் நமக்கு ஆறாவது அறிவு அமைந்திருக்கிறது.
🔰 *இன்றைய பண்புப்பயிற்சி*
🔰 உணர்ச்சிவயப்பட்ட நிலையில் நாம் நம்முடைய மனதை இயக்கி பழக்காமல், அமைதி நிலையில் எப்போதும் நின்று நிதானித்து பழகவேண்டும். இந்த பழக்கத்தின் விளைவாக நம்மை எதுவும் மயக்க முடியாது. மேலும் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளையெல்லாம் சரியாக சீராக செய்துவர, நாம் சரியான ஒன்றை தேர்வு செய்து அதனை சிறப்பாக பின் தொடர்வோம், என்பது ஆழமான அழுத்தமான மறுக்கமுடியாத உண்மையாகும். வாழ்க வளமுடன்...
🔰 *இன்றைய மூலிகை*
🔰 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🔰 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🔰 *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔰 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔰 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔰 மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment