நித்திய கடன் 22.06.2020

☀🌏☀🌏☀🌏☀🌏☀🌏☀

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூன் 22*

☀🌏☀🌏☀🌏☀🌏☀🌏☀

🎲 *இன்றைய நித்தியக்கடன்*

🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🎲 *இன்றைய சாதகம்*

🎲 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, 
பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.

🎲 *இன்றைய நற்சிந்தனை*

🎲 ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நாம் சென்று ஒரு மாதமோ ஒரு வருடமோ தங்கி இருந்தோமேயானால், அந்த ஊரின் அந்த நாட்டின் பழக்கவழக்கங்கள் நம்மை தொற்றிக்கொள்ளும். இது ஒரு இயல்பான இயற்கை நீதியாகும். இந்த இயற்கை நீதியை அடிப்படையாக கொண்டு நாம் அடிக்கடி அமைதிக்குள், ஆழ்ந்த சிந்தனைக்குள், ஆல்பா, தீட்டா, டெல்டா மன அலைச்சுழலில் சூழலுக்குள்ளும், இறைநிலைகுள்ளும் சென்று வரும் போது இவைகளுடைய தன்மையும், தரமும் நம்முடைய தன்மையாகவும், தரமாகவும் தன்மாற்றம் பெறும்.

🎲 *இன்றைய தற்சோதனை*

🎲 ஜீவகாந்தம் சீராக நமக்குள் பெருகிவரும்... இதன் விளைவாக நமக்குள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். உடலில், மனதில் இருக்கக்கூடிய துன்பங்கள் படிப்படியாக குறையும். மூளை செல்கள் நன்றாக கட்டப்படும். பிரபஞ்ச சக்தியோடு இணைப்பு கிட்டும். இதன் விளைவாக இறைநிலையின் தன்மாற்ற சரித்திரங்கள் அனைத்தும் நமக்குள் அனுபவமாகும். தற்சோதனையில் நம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொள்ளும் போது, மேலும் இறைநிலையின் ரகசியங்கள் அனைத்தும் தெள்ளத் தெளிவாக விளங்கி விடும். 

🎲 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎲 வான் கோள்களோடும், வான்காந்தத்தோடும், இறைநிலையோடும் நாம் ஒன்றிணையும் போது எவ்வாறு அதனுடைய தன்மையும் தரமும் நம்முடையதாக தன்மாற்றம் பெறுகிறது, என்பதை அடிக்கடி சிந்தனை செய்து அதனுடைய உள்ளார்ந்த உண்மைகளை உள்ளதை உள்ளவாறு சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த பண்பில் நாம் சிறந்து ஓங்கும் போது உயிரும் மனமும் மெய்ப் பொருளாய் மாறும். வாழ்க வளமுடன்...

🎲 *இன்றைய மூலிகை*

🎲 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🎲 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🎲 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🎲 *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎲 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎲 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*


          *🌸வாழ்க வையகம்🌸*
 

Comments