🌐♨🌐♨🌐♨🌐♨🌐♨🌐
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜூலை 01*
🌐♨🌐♨🌐♨🌐♨🌐♨🌐
🍁 *இன்றைய நித்தியக்கடன்*
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🍁 *இன்றைய சாதகம்*
🍁 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🍁 *இன்றைய நற்சிந்தனை*
🍁 மனம் சார்ந்த பாடத்தில் உலகம் சார்ந்த அனைத்து மனிதர்களையும் வெற்றிபெறச் செய்வதற்காக "வேதாத்திரி மகரிஷி" இந்த உலக சமுதாய சேவா சங்கத்தை நிறுவினார்கள். இங்கு முறையாக கொடுக்கப்படும் பயிற்சியில் ஊக்கத்தோடும், தன்னார்வத்தோடும் எவரொருவர் மேற்கொண்டாலும் உளவியல், அறிவியல், விண்ணியல், உயிரியல், கலையியல், பயிரியல் என அனைத்து இயல்களிலும் வெற்றியை காணமுடியும்.
🍁 *இன்றைய தற்சோதனை*
🍁 ''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்ற இந்த வாக்கியத்தின் நிறுபனமாகவே உலகம் முழுவதும் பல்வேறு பயிற்சி முறைகளை அறிஞர்கள் உருவாக்கி உள்ளனர். மனவளக்கலை இதில் ஒரு படி உயர்ந்து நோயின் வகையும், அது தங்கும் விதமும், அதைப் போக்கிக் கொள்ளக்கூடிய முறையையும், தெள்ளத்தெளிவாக பயிற்சியின் மூலமாக விளக்கத்தோடு அளிக்கப்படுகிறது. "எந்நாட்டவருக்கும் எம்மதத்தவருக்கும் இது பொது".
🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍁 மனவளக்கலை யோகாவை சாதனை மார்க்கமாக செய்முறை பயிற்சியோடு, அனைத்து உலக சிக்கல்களுக்கும் தீர்வாக அமைக்கப்பட்டு உள்ளது. தனிமனிதனில் துவங்கி உலகம் முழுவதும் அமைதி பெறுவதற்கான அனைத்து விஞ்ஞான விளக்கத்தோடு, மெய்ஞான அறிவோடு, உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை நாள் தவறாமல் செய்து வாழ்வில் நாமும் நம் குடும்பமும் நலமும் வளமும் பெறுவோமாக. வாழ்க வளமுடன்...
🍁 *இன்றைய மூலிகை*
🍁 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🍁 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🍁 *புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍁 *குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍁 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment