நித்தியக்கடன் ஜனவரி - 21 2026

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜனவரி - 21


🌿🏮🌿🏮🌿🏮🌿🏮🌿🏮🌿


🌀 இன்றைய நித்தியக்கடன்


🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌀 இன்றைய சாதகம் 


🌀 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


🌀 இன்றைய நற்சிந்தனை 


🌀 நம்முடைய பாதங்களே எடுத்து வைத்து நடக்கும்போது மிகுந்த கவனத்தோடு நடக்க வேண்டும் நம்முடைய பாதச்சுவடுகளை நம்முடைய அடுத்த சந்ததிகள் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் நாம் இன்று எவ்வாறு வாழ்கிறோமோ அதைப் பின்பற்றியே நாளை அவர்களும் வாழப் போகிறார்கள் இன்று என்னுடைய எண்ணம் சொல் செயல் இவை எல்லாம் எப்படி இருக்கிறதோ அது போலவே அவர்களுடைய நாளையே எண்ணம் சொல் செய்யவும் அமையப்போகிறது என்ற உண்மையை உணர்ந்து நம்முடைய வாழ்க்கை பாதையில் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைப்போம்


🌀 இன்றைய தற்சோதனை


🌀 நாம் நல்ல முறையில் வாழ்ந்து நம் கருத்தொடர் வழியாக நமக்கும் அவர்களுக்கும் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்து என்பது இதுதான் நல்வினை பதிவுகள் நோயற்ற பதிவுகள் இறை உணரக்கூடிய பதிவுகள் இந்த நல்வினை பதிவுகள்தான் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கிறது நம் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் முடிவு செய்கிறது இறைவனை உணர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது என்ற இந்த உண்மைகளையெல்லாம் தற்சோதனை செய்து அவரவர்களுடைய அனுபவமாக்கிக் கொள்ள வேண்டும்


🌀 இன்றைய பண்புப்பயிற்சி


🌀 தவம் தற்சோதனை உடற்பயிற்சி காயகல்பம் இவைகளில் ஈடுபட்டிருக்கும் நாம் எப்போதும் எங்கேயும் எதற்காகவும் முறை மாறிய அளவு மீரியோ செயல்படக்கூடாது சந்தர்ப்ப சூழ்நிலைகள் தடம்மாறினாலும் நாம் தடுமாறாமல் குருவின் கரங்களை பற்றிக்கொண்டு வைராக்கியத்தோடு நின்று நிலைத்து வாழ்ந்து காட்ட வேண்டும் இந்த மேன்மையான சொத்தை நம்முடைய சந்ததிகளுக்கு அற்பணித்து மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்வோமாக வாழ்க வளமுடன்...


🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் (கிரகண நேரத்தில் இத்தவம் செய்வது சிறப்பு) தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯️🙏☯️🙏☯️🙏☯️🙏☯️🙏☯️ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments