நித்தியக்கடன் ஜனவரி - 13 2026

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜனவரி - 13


🎱🌿🎱🌿🎱🌿🎱🌿🎱🌿🎱


🌀 இன்றைய நித்தியக்கடன்


🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🌀 இன்றைய சாதகம் 


🌀 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், 

மாலை:- இறைநிலை தவம்.


🌀 இன்றைய நற்சிந்தனை 


🌀 பல்வேறு விதமான பாதிப்புகள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடைபெற்று வருகிறது. இந்த பாதிப்புகளின் வகைகளும், விளைவுகளும், அவை நம்மிடம் வந்து சேரும் வழிமுறைகளும் நமக்கு தெளிவாக தெரிய வேண்டும். அப்போது தான் அதை நாம் எதிர்கொள்ள முடியும். மேலும் இந்த பாதிப்புகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு, நாம் எது மாதிரியான முயற்சியை மேற்கொள்ள வேண்டும், என்பதில் நமக்கு ஒரு தெளிவான சிந்தனை உருவாகும்.


🌀 இன்றைய தற்சோதனை


🌀 நண்பர்கள், உறவினர்கள், பணம், சமுதாயம், கோள்கள், உணவுவகை, எண்ணம், கருவமைப்பு, சந்தர்ப மோதல், தற்செயல் விபத்து, பருவகால மாற்றங்கள் என இவைகளால் நம் உடல் பாதிப்பும், மன பாதிப்பும் ஏற்படுகின்றன. இவைகளைத் தாண்டி புறத்திலிருந்து ஏற்படக்கூடிய பாதிப்புகள் இன்னும் பற்பல இருக்கின்றன. கொஞ்சம் அகம் நோக்கி திரும்பி அகத்தின் வழியாக ஏற்படும் பாதிப்புகளையும் சிந்திப்போம். பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவைகளால் அகத்தின் வழியாக  ஏற்படும் பாதிப்புகளால் நம் உடலில் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் இவைகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.


🌀 இன்றைய பண்புப்பயிற்சி


🌀 இந்த புற பாதிப்புகளையும் அக பாதிப்புகளையும் நாம் படிப்படியாகத்தான் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். புறத்திலிருந்து நம் கருமையத்திற்கு வரக்கூடிய பஞ்சபூத ஆற்றலானது, கருமைய தூய்மை பெற பெறத்தான் தரமான ஆற்றலை நம் கருமையம் நோக்கி ஈர்க்கப்படும், என்ற உண்மையை இவ்விடத்தில் பதிவு செய்ய யாம் கடமைப் பட்டுள்ளோம். ஜீவாத்மா பரமாத்மாவோடு முழுமையாக இணைவதற்கு, கருமைய தூய்மை ஒன்றே ஈடு இணையில்லா வழிமுறையாகும். ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் இரண்டொழுக்க பண்பாட்டை கடைபிடித்து, புதுப்பித்து கொள்வோம் கருமையத்தை. வாழ்க வளமுடன்...


🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் (கிரகண நேரத்தில் இத்தவம் செய்வது சிறப்பு) தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯️🙏☯️🙏☯️🙏☯️🙏☯️🙏☯️ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments