நித்தியக்கடன் ஜூலை 25 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூலை 25 


🧊🌻🧊🌻🧊🌻🧊🌻🧊🌻🧊


🍥 இன்றைய நித்தியக்கடன்


🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🍥 இன்றைய சாதகம் 


🍥 வெள்ளிகிழமை காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.


🍥 இன்றைய நற்சிந்தனை 


🍥 தங்களுடைய தேவைகளை முறைப் படுத்திக் கொள்ளாமல் வாழும் தம்பதியர்களுக்கு, பிறக்கும் குழந்தைகள் அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களுக்கு, தேவையில்லாததை எல்லாம் தேவையாகிக் கொள்வார்கள். இதன் விளைவாக வாழ்க்கையில் சிக்கல்களையும், துன்பங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். பிள்ளைகள் பெற்றோர்களின் நகல் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இதனை  மறந்து செயல்படும்போது  பிள்ளைகள் செய்கின்ற தவறுகளுக்கு அவர்கள் மீதே குற்றம் சொல்கிறோம். இது எந்த வகையில் ஞாயம்.


🍥 இன்றைய தற்சோதனன

 

🍥 ஒழுக்க நெறியோடு வாழ்வதற்கு தன்னை தானே எப்போதும் ஆர்வத்தோடு முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆர்வமும், சீர்திருத்தமும் தான் நாமும் நம் குடும்பமும், நலமும் வளமும் பெறுவதற்கான ஒரே வழி தடமாகும். இதை மறந்தாலோ, அல்லது மறுத்தாலோ துன்பம் வேறு யாருக்கோ அல்ல நமக்கே தான் என்பதை தற்சோதனை செய்து முழுமையாக புரிந்து கொள்வோம்.


🍥 இன்றைய பண்புப்பயிற்சி


🍥  உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு நாம் எப்போதும் எங்கேயும் தயங்க கூடாது. அப்படி தயங்கும்போது நம்முடைய வாழ்க்கையை நாம் இழக்க நேரிடுகிறது. உண்மை என்பது யாருக்காகவும், எப்போதும் தன்னை மாற்றிக் கொள்ளாத பூரணமான ஒன்று. உண்மைக்காக நாம் தான் நம்மை சீர்திருத்தங்களுக்கு அழுத்திக் கொள்ள வேண்டும். உண்மையை பேசி, பழகி வாழும் பண்பில் நாளும் உயர்வோம். ஒவ்வொரு நாளும் அதற்கெனவே பயிற்சி செய்வோம் நம்முடைய அடுத்த  சந்ததியினரும் வாழ உதவி செய்வோம். வாழ்க வளமுடன்...         

          

🍥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🍥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்

Comments