நித்தியக்கடன் மே 26 2025

 🏔️🌸🏔️🌸🏔️🌸🏔️🌸🏔️🌸🏔️


*வாழ்க வையகம்*

*வளர்க வேதாத்திரியம்*

*வாழ்க வளமுடன்*

*நித்தியக்கடன்*

*மே 26


🏔️🌸🏔️🌸🏔️🌸🏔️🌸🏔️🌸🏔️


🔰 *இன்றைய நித்தியக்கடன்*


🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🔰 *இன்றைய சாதகம்* 


🔰 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, 

பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.  


🔰 *இன்றைய நற்சிந்தனை* 


🔰 மறைபொருள்களை பற்றி ஒவ்வொரு மனிதரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் நாம் மறைபொருளால் தான் உருவாக்கப்பட்டு இருக்கிறோம். மறைபொருள் தான் நமக்குள் உயிராக, மனமாக, அறிவாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. மறைபொருள் தான் நம் உள்ளும் புறமும் இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டும் இருக்கிறது. மறைபொருள் தேவைக்கு ஏற்ப தன்னை வெளிப்படுத்திக் கொண்டும், தேவைக்கு ஏற்ப தன்னை மறைத்துக் கொண்டும், இந்த பிண்டத்தையும் அண்டத்தையும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது...


🔰 *இன்றைய தற்சோதனன*


🔰 இறைநிலை, இறைத்துகள், விண்துகள், காந்தம், பஞ்ச தன்மாத்திரைகள், சீவகாந்தம், கருமையம், மனம், வினை பதிவுகள், அறிவின் முழுமை பேறு இந்த பத்து விதமான மறைபொருள்களை அடிப்படையாக கொண்டே நம் வாழ்க்கை கட்டமைக்கப் பட்டிருக்கிறது. இவைகளைப் பற்றிய புரிதலும் தெளிவும் நம்மிடையே இல்லை என்றால், இவைகள் சார்ந்த இயக்கங்களையும் செயல் விளைவு முறைகளையும், நாம் சரியாக புரிந்து கொள்ள முடியாது. அவ்வாறு நாம் புரிந்து கொள்ளாத போது வாழ்க்கையில் ஏதோ ஒரு குறை, ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டே தான் இருக்கும்.


🔰 *இன்றைய பண்புப்பயிற்சி*


🔰 சில வேலைகளை துவங்குவதற்கும், சில வேலைகளை முடிப்பதற்கும் நமக்கு இவ்வுலகில் சில தகவல்கள் தேவை என்று வைத்துக்கொள்ளுங்கள், இப்போது நம்முடைய வீட்டில் ஒரு கணினி இருக்கிறது, இந்த கணினியை பயன்படுத்த தெரியாத போது நாம் என்ன நிலைக்கு தள்ளப் படுவோமோ, அதே நிலை தான் மறைபொருள்களைப் பற்றி புரிதல் இல்லாத போதும் உருவாகும். இந்த மனிதனாக பிறவி எடுத்ததன் வேலை முடியாமல், மீண்டும் மீண்டும் பிறப்பதும் இறப்பதும் ஆக பிறவித் தொடர் நீண்டுகொண்டே போகிறது. மறைபொருள்களை உணர்ந்து கொள்வோம் மதிப்புடைய மனித வாழ்வை நிறைவாய் வாழ்வோம். வாழ்க வளமுடன்...          

🔰 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*


🔰 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      *🌸வாழ்க வையகம்🌸*

   *🍁வளர்க வேதாத்திரியம்🍁*

      *🌸வாழ்க வளமுடன்🌸*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments