நித்தியக்கடன் ஜூன் 11 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 11


🕳️🔅🕳️🔅🕳️🔅🕳️🔅🕳️🔅🕳️


🌀 இன்றைய நித்தியக்கடன்


🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🌀 இன்றைய சாதகம் 


🌀 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


🌀 இன்றைய நற்சிந்தனை 


🌀 24 மணி நேரத்தில் குறிப்பிட்ட 8 மணி நேரம் வரை உடலுக்கு ஓய்வு தேவை, அது போலவே மனதிற்கும் ஓய்வு தேவை, அது போன்றே உயிருக்கும் ஓய்வு தேவை. இந்த ஓய்வை நீங்கள் உங்களுடைய உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் வழங்காத போது அவைகளுடைய இயக்கத்தில் குழப்பம் ஏற்படுகிறது. உடல் நோயாகவும், மன பிளவாகவும், உயிர் சிதைவாகவும் அவைகள் வெளிப்படுகின்றன. ஒரு தவறை இன்னொரு தவறால் நிச்சயமாக சரி செய்து விட முடியாது. உறக்கம் என்பது உடலுக்கு கொடுக்கும் ஓய்வு. மனதிற்கும் உயிருக்கும் தவமே ஓய்வாக அமைகிறது...


🌀 இன்றைய தற்சோதனன


🌀 உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்திலும் அளவுமுறை மீறாமல் அவைகளை மதித்து வாழும் போது மேலே சொல்லப்பட்ட உடல் ஓய்வு, மன ஓய்வு, உயிர் ஓய்வு என அனைத்தும் சீராக அந்தந்த நாட்களில் அமைந்து வாழ்க்கையில் எல்லா விதமான வெற்றியும், மகிழ்ச்சியும், மனநிறைவும் கிடைக்கப் பெற்றுக் கொண்டே இருக்கும். "செயலுக்கு தக்கவிளைவு" என்பது ஒருபோதும் மாற்ற முடியாத உண்மையாகும்.


🌀 இன்றைய பண்புப்பயிற்சி


🌀 நிதானமான உடற்பயிற்சி, நிதானமான காயகல்பம், நிதானமான தவம், அன்றாட வாழ்க்கையில் நிதானமாக அனைத்து காரியங்களையும் உயிர் உணர்வோடு செய்து பழகி, இறை நிலையை நோக்கி நகர்வதற்கு இது ஒன்றே நமக்கு அமைந்திருக்கும் பெரும் வாய்ப்பு. இந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு நாளுக்கு நாள் நாமும், நம் குடும்பமும், நலமும் வளமும் பெறுவோமாக. வாழ்க வளமுடன்... 

          

🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments