மூச்சுப்பயிற்சி நன்மைகள்

 மூச்சுப்பயிற்சி  நன்மைகள்


மூச்சுப் பயிற்சி செய்ய தரையில் நேராக உட்கார்ந்து, வலது மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து, இடது மூக்கின் வழியாக மூச்சை வெளியே விட வேண்டும். அதேபோன்று, இடது மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து, வலது மூக்கின் வழியாக வெளியே விட வேண்டும். இவ்வாறு மாறி மாறி பத்து பதினைந்து நிமிடங்களுக்கு செய்வதை மூச்சுப் பயிற்சி ஆகும்.




பிராணாயாமம் என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. பிராணாயாமம் என்பது ‘பிராண’ மற்றும் ‘அயாமா’  என்ற வார்த்தைகளின் கூட்டாகும். 



 

பிராணாயாமம் மூலம் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட வேண்டும்.

 

* நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைத் தூண்டச் செய்து சக்கரங்கள் நன்றாக செயல்பட உதவுகிறது. உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை குணமாக்கும் சக்தி மூச்சுப் பயிற்சிக்கு உண்டு.


 

* மூச்சுப் பயிற்சி செய்வதால் சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு, உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சி செய்வதால் நினைவாற்றல்  பெருகும்

 

* மூச்சுப் பயிற்சி செய்வதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். தினமும் மூச்சுப் பயிற்சி செய்து வர உடலுக்குள் கிருமிகள் நுழைவதைத் தடுத்து  நிறுத்தும்.

 

* தினமும் மூச்சுப் பயிற்சி செய்வதால் உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கும். பதட்டம் ஏற்படாமல் இருக்க மூச்சுப்பயிற்சி மிகவும்  பயன்படுகிறது.

Comments