வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 28
💢🕳️💢🕳️💢🕳️💢🕳️💢🕳️💢
❄️ இன்றைய நித்தியக்கடன்
❄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
❄️ இன்றைய சாதகம்
❄️ திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி,
பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
❄️ இன்றைய நற்சிந்தனை
❄️ உடலிலுள்ள எல்லா மையங்களிலும் மனதை சுலபமாக கவனித்து இயக்கும் பழக்கத்தில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும். நினைத்த மாத்திரத்தில் கவனத்தை குவித்து ஆழ்ந்து செல்லக்கூடிய, மனதை ஒருமுகப்படுத்த கூடிய இப்பயிற்சி முறையில் அனைவரும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம். மனதை ஒருமுகப்படுத்துவதற்கு சிரமமாக இருக்கிறது என்றால், சரியான முறையில் நீங்கள் தற்சோதனை பயிற்சிகளில் இன்னும் தேர்ச்சி பெறவில்லை என்று அர்த்தம்.
❄️ இன்றைய தற்சோதனன
❄️ உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை என்ற பலமான அஸ்திவாரத்தின் மேல்தான் மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சி வெற்றி பெறும். இந்த நான்கு விதமான பயிற்சி முறைகளும் நடைமுறையில் இல்லாதபோது மனதை ஒருமுகப்படுத்துவது என்பது, ஒரு கனவாகவும் கற்பனையாகவும் தான் இருக்கும். முறையான முயற்சி நம்மை முழுமைப்பேருக்கு அழைத்துச் செல்லும். குறுக்கு வழியில் ஞானத்தில் வெற்றி பெறுதல் என்பது இயலாத காரியம்.
❄️ இன்றைய பண்புப்பயிற்சி
❄️ நம்முடைய முந்தைய பிறவிகள் அனைத்தும் குறுக்கு வழியில் தான் வாழ்ந்து, காலத்தை கடந்து இந்த ஆறாவது அறிவு கொண்ட மனிதப் பிறப்பு அமைந்திருக்கிறது. இந்த மனிதப் பிறவியானது நேர்வழி, ஞானவழி இவ்வழியில் வாழ்வதற்காகவே உருவானதாகும். இப்பிறவிக்கு ஒத்த செயல்களால் மட்டும்தான் வெற்றி பெறுவோமே தவிர திசைமாறிய, முறைபிறழ்ந்த செயல்களால் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லாத ஒன்று. ஞானம் என்பது நன்னடத்தை, உண்மை இவைகளின் அம்சமாகும். இதனை உணர்ந்து வாழ்வோருக்கு ஞானம் நிச்சயமாக சித்திக்கும். வாழ்க வளமுடன்...
❄️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
❄️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment