வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 26
🌀💥🌀💥🌀💥🌀💥🌀💥🌀
🥏 இன்றைய நித்தியக்கடன்
🥏 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🥏 இன்றைய சாதகம்
🥏 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்த தவம்.
🥏 இன்றைய நற்சிந்தனை
🥏 நமக்குள்ளாக இருக்கக்கூடிய பாவத்தையும் புண்ணியத்தையும் நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இவைகளை பற்றிய தெளிவு நம்மிடையே இல்லையானால் அவைகளை நாம் பயன்படுத்த முடியாது. மாறாக நம்மை தான் அவைகள் பயன்படுத்தும். பாவ புண்ணியம் என்னும் இரண்டு விதமான தன்மைகளும் நமக்குள் இருக்கின்றன. நமக்குள் இருக்கும் இந்த புண்ணியத்தை நாம் முறையான பயிற்சி மூலம் ஊக்கப்படுத்தி கொள்ள வேண்டும். இதன் விளைவாக அண்டவெளியில் இருக்கக்கூடிய அருட்பேராற்றல் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும்.
🥏 இன்றைய தற்சோதனன
🥏 சரியான புரிதலும் சரியான செயல்பாடும் இதற்கு அடிப்படையான ஆற்றல்களை உருவாக்கும். நமக்குள் உள்ள நன்மையை ஊக்கப்படுத்திக் கொண்டு, பிரபஞ்ச வெளியில் உள்ள நன்மையோடு ஒன்று கலப்பது தான் இப்பிறவியினுடைய நோக்கமாகும். ஆறாவது அறிவில் முழுமை பெறும் நிகழ்ச்சியும் இந்த இடத்தில்தான் நடைபெறும். உள்ளும் புறமும் உள்ள பேராற்றலை ஒன்றிணைப்பதற்கான வாய்ப்பினை உங்கள் செயல்கள் மூலமாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.
🥏 இன்றைய பண்புப்பயிற்சி
🥏 நமக்குள் உள்ள பேரொளியை உணர்ந்து அதனை வலுப்படுத்திக் கொண்டு, பிரபஞ்ச வெளியில் உள்ள பேராற்றலுக்குள் இணைய எல்லா வகையிலும் முயற்சிக்க வேண்டும். மேலும் எல்லாம் வல்ல இறைநிலை வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலமென்ற வளம் நான்கையும் தனக்குள் உள்ளடக்கமாக வைத்திருந்த போதும் அவைகள் முறையாக நமக்குளிருந்து வெளிப்படுவதற்கான வாய்ப்பினை, நம்முடைய நன்னடத்தை மூலமாகத்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதைத் தவிர வேறு வழியே இல்லை. அப்பண்பில் உயர்வோம்! வாழ்வோம்! வாழ்க வளமுடன்...
🥏 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🥏 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment