வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 19
🔅🪻🔅🪻🔅🪻🔅🪻🔅🪻🔅
🔥 இன்றைய நித்தியக்கடன்
🔥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔥 இன்றைய சாதகம்
🔥 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்த தவம்.
🔥 இன்றைய நற்சிந்தனை
🔥 பொதுவாக நான்கு விதமான பருவ காலங்கள் உண்டு அவை மழை, காற்று, வெயில், பனி இந்த பருவகாலங்களின் மாறுதல்களுக்கு ஏற்ப நம் உடலில் பல விதமான ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன இந்த ரசாயன மாற்றங்களை நம் உடல் தாங்கும் சக்தியோடு இருக்கும்போது நாம் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்கிறோம். இந்த ரசாயன மாற்றத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லாதபோது அது நோயாக உணரப்படுகிறது.
🔥 இன்றைய தற்சோதனன
🔥 உடலுக்கு வெளியே நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளுக்கு உடலுக்குள் ஏற்படுகின்ற மாற்றங்கள் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது அறிவோடும், ஆற்றலோடும் திறமைகளை வெளிப்படுத்தும் போது வாழ்க்கையின் சூழல்கள் மாற்றம் பெறுகின்றன நம்மோடு நெருக்கமாக இருக்கும் நண்பர்களோடும் உறவுகளோடும் பழகும்போது நம்முடைய மனப்பக்குவம் சிறப்பாக வெளிப்படுகிறது. மேலும் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளோடு நம்மை முழுமையாக இணைத்துக் கொள்ளும் போது துன்பம் இல்லாத வாழ்க்கையை வாழ முடிகிறது.
🔥 இன்றைய பண்புப்பயிற்சி
🔥 எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு எல்லோரோடும் இணக்கமாக வாழக்கூடிய பண்பில் உயர வேண்டும். இந்த உயர்வு நம்முடைய பலவிதமான துன்பங்களையும், மன சிக்கல்களையும், உடல் நோய்களையும் போக்கும்படியாக அமைகிறது. புற சுழலுக்கும், ஆக ஆளுமைக்கும் நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றோடும் இணக்கமாக வாழும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்...
🔥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment