வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 17
🌻🌾🌻🌾🌻🌾🌻🌾🌻🌾🌻
🎱 இன்றைய நித்தியக்கடன்
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎱 இன்றைய சாதகம்
🎱 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🎱 இன்றைய நற்சிந்தனை
🎱 உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு இயற்கை கட்டமைப்பின் கீழ் அதனை ஒழுங்கமைத்துக் கொண்டும் பல்வேறு விதமான பழக்கவழக்கங்களை உருவாக்கிக் கொண்டு இயற்கை விதியை மீறாமல் அவைகள் வாழ்கின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும் இந்த இயற்கை அமைப்பை புரிந்துகொண்டு அது வாழ்கவே வாழும் ஒரு சிறப்பான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
🎱 இன்றைய தற்சோதனன
🎱 விலங்குகள் யாவும் இந்த இயற்கையினுடைய கோட்பாட்டை மீறமுடியாதபடி அவைகளுடைய அறிவு, திறமை அனைத்தும் இயற்கை குள்ளேயே நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. விலங்குகளுக்கு தன்னைப் பற்றியோ, தன்னுடைய சூழ்நிலைகளைப் பற்றியோ, அவைகளின் உருவாக்கங்கள் பற்றியோ சிந்தித்து புரிந்து கொள்ள தெரியாது. ஆனால் மனிதன் இந்த இயற்கையைப் பற்றியும் தன்னைப் பற்றியும் முழுமையாக புரிந்துகொண்டு தெரிந்துகொண்டு அவற்றோடு இணைந்து வாழ வேண்டும் என்ற அமைப்பின் கீழேயே மனிதர்களின் கருமையம் உருவாகியிருக்கிறது. விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு இதனை நன்றாக தற்சோதனை செய்து விலங்கின பதிவுகளில் இருந்தும் விலங்கின பழக்கவழக்கங்கள் இருந்தும் நம்மை நாம் காத்துக் கொள்வோம்.
🎱 இன்றைய பண்புப்பயிற்சி
🎱 விலங்குகள் வாழ்வதற்கு போராடுகின்றன தன்னுடைய உயிரை பாதுகாத்துக் கொள்ளவும் போராடுகின்றன மனிதர்கள் தற்கால சூழ்நிலையில் அவ்வாறு இல்லை ஆனால் தனக்குள்ளாக இருக்கக்கூடிய விலங்கின பதிவுகளோடு போராடி தன்னை தன்னுடைய ஞானத்தை நிறைவு செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலை தற்கால மனிதர்களுக்கு அமைந்திருக்கிறது இதை தெளிவான மனநிலையில் தெளிவாக புரிந்து கொண்டு தனக்கும் இயற்கைக்கும் உள்ள உயர்ந்த இணைப்பை வலுப்படுத்தும் பண்பில் உயர்வோம் இயற்கை வேறு நாம் வேறு அல்ல. வாழ்க வளமுடன்...
🎱 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎱 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment