நித்தியக்கடன் மே 02 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மே 02


🔲💥🔲💥🔲💥🔲💥🔲💥🔲


🥏 இன்றைய நித்தியக்கடன்


🥏 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🥏 இன்றைய சாதகம் 


🥏 வெள்ளிகிழமை காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.


🥏 இன்றைய நற்சிந்தனை 


🥏 சின்ன சின்ன புள்ளிகளை சரியான இடைவெளியை அமைத்துக் கொண்டு சேர்த்துக் கொண்டே வந்தால் அது ஒரு அழகான ஓவியமாக உருமாறும். பொருத்தமான இடத்தில் இந்த புள்ளிகளை பொருத்தும் போது இந்த ஓவியம் உருவாகிறது. இந்த புள்ளிகளை இடமாற்றி அல்லது வைக்க கூடாத இடத்தில் வைத்தால் இதன் விளைவாக நமக்கு முழுமையான ஓவியம் கிடைப்பது இல்லை. இது போலத்தான் மனதை எதன்மீது வைக்கவேண்டும் எண்ணத்தை எப்படி பயண்படுத்த வேண்டும், அதை எந்த அளவு பயணிருக்கிறது என்ற தெளிவு நமக்கு வேண்டும்.


🥏 இன்றைய தற்சோதனன


🥏 உருவாகின்ற அனைத்து எண்ணங்களும் நமக்கு நன்மைகளை தரும் என்று சொல்வதற்கு இல்லை. இந்த எண்ணத்தின் விளைவு என்ன என்று நாம் சரியாக கணித்து கொண்டு செயல்பட வேண்டும். எப்போதும் நம்மை நியாயவாதியாக சிந்தித்து விடக்கூடாது, பிழைகளும் எழலாம். அதே நேரத்தில் மற்றவர்களை எந்த நேரத்திலும் மன்னிப்பதற்கு  தயங்கக்கூடாது. நம்முடைய வாழ்க்கையை தற்சோதனையோடு சிறப்பாக வாழ்வதற்கு முனைவோம்.


🥏 இன்றைய பண்புப்பயிற்சி


🥏 மனதை அமைதியாக வைத்திருக்கும் பண்பில் உயர்வேண்டும். இந்த பண்பு தான் நம்முடைய சிந்தனையை, சிந்தனையுடைய சிறப்பினை நமக்கு தெளிவாக உணர்த்தும். இந்த தெளிவான மனநிலையில் அமைதியாக அனைத்தையும் சிந்தித்து புரிந்து, உணர்ந்து கொள்ள முடியும். இந்தப் பண்பே நம்மை எல்லா நிலைகளுக்கும் தகுதியுடையவராக உயர்த்தும் இறைநிலையின் தன்மாற்ற சரித்திரத்தை உணரலாம். வாழ்க வளமுடன்...          


🥏 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🥏 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments