நித்தியக்கடன் நவம்பர் 29 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 29


🌸⭕🌸⭕🌸⭕🌸⭕🌸⭕🌸


🌀 இன்றைய நித்தியக்கடன்


🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🌀 இன்றைய சாதகம் 


🌀 வெள்ளிகிழமை காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.


🌀 இன்றைய நற்சிந்தனை 


🌀 நாம் உடுத்துகின்ற துணியில் இருக்கக்கூடிய அழுக்குகளை போக்க வேண்டுமானால் சலவை கட்டி, சலவைத்தூள், நீர், வாஷிங் மிஷின் என இவ்வளவையும் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு துணியில் இருக்கக்கூடிய அழுக்கை அகற்ற இவ்வளவு வேலைகள் தேவைப்படுகிறது. இவ்வளவும் சரியாக முறையாக நடந்தால் தான் அந்த அழுக்கு போகும்.


🌀 இன்றைய தற்சோதனன


🌀  உயிரில் இருக்கக்கூடிய அழுக்கை களங்கத்தை போக்க உடல் பயிற்சி, காயகல்ப பயிற்சி, தவ பயிற்சி தற்சோதனை பயிற்சி இவை மூலமாகவும், ஒழுங்கான செயல்கள் மூலமாகவும் மட்டும்தான் அகற்ற முடியும். உயிர் மீது படிந்துள்ள களங்கங்களை போக்குவதற்கு இதன் வழியாக தான் முயற்சி செய்ய வேண்டும். இதை தவிர்த்து நாம் எந்த வழி முறையை பின்பற்றினாலும், அந்த அழுக்கு அந்தக் களங்கம் நீங்க போவதே கிடையாது.


🌀 இன்றைய பண்புப்பயிற்சி


🌀 புலன் உணர்வுகளை ஒருங்கிணைத்து கொண்டு அறிவின் வழிகாட்டுதலின்படி வாழக்கூடிய பண்பு தான் மனிதனுக்கு நல்லதொரு வாழ்க்கை முறையாகவும் பருவுடல், நுண்ணுடல், காந்த உடல், இதனுடைய ஆரோக்கியநிலைப் பாடாகவும் அமைகிறது. மனிதன் ஞானத்தினுடைய ஒட்டுமொத்த உருவமாகும். மனிதனுக்கு மட்டுமே ஞானம் என்பது சாத்தியம். இந்த சிறப்பான பண்பில் நம்மை தொய்வு இல்லாமல் நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்...           


🌀 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌀 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments