வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
டிசம்பர் 28
🥏⛳🥏⛳🥏⛳🥏⛳🥏⛳🥏
🌸 இன்றைய நித்தியக்கடன்
🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌸 இன்றைய சாதகம்
🌸 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்ததவம்.
🌸 இன்றைய நற்சிந்தனை
🌸 "சட்டம் தன் கடமையை செய்யும்" இந்த வாசகம் மனிதனுடைய சட்டம் கிடையாது, இறைவனுடைய சட்டம். இறைநீதி எந்த இடத்திலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னுடைய நீதியை மாற்றிக் கொண்டதாகவோ, அல்லது நீதியை கொன்றுவிட்டதாகவோ வரலாறு கிடையாது. இறைவனின் தன்மாற்ற சரித்திரத்தில் எந்த ஒரு இடத்திலும், இந்தப் பிழை நிகழ்ந்தது கிடையாது, இனி நிகழப் போவதும் கிடையாது. சட்டம் தன் கடமையை செய்யும்
🌸 இன்றைய தற்சோதனன
🌸 தனக்கோ பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, தன்னுடைய "எண்ணம் சொல் செயல்" இவை வழியாக துன்ப நிகழ்வுகளை ஏற்படுத்திக்கொள்ளாமல் வாழ்வதே இறை நீதியாகும். இறைவனுடைய இந்த சட்டத்தை எவரெல்லாம் மதிக்கிறார்களோ, ஒத்தும் உதவியுமாக யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் வாழ்க்கை நிறைவான தாகவும்,அமைதி உடையதாகவும் அமைகிறது. இதனை தற்சோதனை செய்து புரிந்து கொள்வது மட்டும்தான் மனிதர்களுடைய கடமையாகும்.
🌸 இன்றைய பண்புப்பயிற்சி
🌸 இந்த பிரபஞ்சத்திலும்,நமது உடலிலும்,103 மூலகங்கள் (elements) உள்ளன.இந்த அனைத்து மூலகங்களோடும் சரியான நுட்பத்தோடும் இணைந்து, இயங்கக்கூடிய பண்பு தான் மனிதனுடைய சிறப்பான பண்பாகும். இந்த சிறப்பு மிக்கபண்பு மனிதனுக்குள் உள்ளடங்கி இருக்கிறது. இதனை முறையான பயிற்சி மூலம் நம்முள் இருந்து சரியான அளவு முறையில் வெளிப்படுத்திக் கொள்ள முடியும். வாழ்க வளமுடன்..!
🌸 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌸 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment