நித்தியக்கடன் நவம்பர் 21 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 21


🏮🧩🏮🧩🏮🧩🏮🧩🏮🧩🏮


🎲 இன்றைய நித்தியக்கடன்


🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🎲 இன்றைய சாதகம் 


🎲 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


🎲 இன்றைய நற்சிந்தனை 


🎲 தன்னுடைய உடலை தூக்கிக்கொண்டு தனது சிறகுகளை அசைத்து ஒரு பறவையால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசையில் இருந்து மேல்நோக்கி செல்ல முடிகிறது. பறவையினுடைய உடலமைப்பு, அதனுள் இயங்கும் காந்தவிசை இவை எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த நிகழ்ச்சியை நிகழ்த்துவதற்கு உதவியாக இருக்கிறது.


🎲 இன்றைய தற்சோதனன


🎲 இயற்கையை ரசித்து பார்த்து அதனை அப்படியே விஞ்ஞான கருவிகளாக நாம் இன்று மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். பறவையைப் பார்த்து விமானம் செய்தோம் வாகனங்களை உருவாக்கினோம். அவைகளுடைய கூடுகளை கண்டு நாம் வீடு கட்டினோம். இவ்வாறாக இயற்கையிலிருந்து ஒவ்வொன்றையும் கற்றுத் தெரிந்து கொண்டு நாம் விஞ்ஞான வாழ்க்கையில் முன்னேறினோம். இன்னமும் நிறைய இருக்கிறது. அவை அனைத்தையும் சிந்தித்து தற்சோதனை செய்து பாருங்கள்.


🎲 இன்றைய பண்புப்பயிற்சி


🎲 இயற்கையிடம் இருந்து ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்ட நாம் இன்று இந்த இயற்கையை பழுதாக்கி கொண்டிருக்கிறோம். அளவுக்கு மீறிய நம்முடைய ஆசை இன்று இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறது. நாமும் இந்த இயற்கையின் ஒரு பகுதிதான் என்பதை மறந்துவிடக்கூடாது. இயற்கையை மதித்து வாழும் பண்பில் உயர்வோம். எல்லா வகையிலும், எல்லா நிலையிலும். வாழ்க வளமுடன்...       


🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments