நித்தியக்கடன் டிசம்பர் 14 2024

 🪷🚥🪷🚥🪷🚥🪷🚥🪷🚥🪷


*வாழ்க வையகம்*

*வளர்க வேதாத்திரியம்*

*வாழ்க வளமுடன்*

*நித்தியக்கடன்*

*டிசம்பர் 14*


🪷🚥🪷🚥🪷🚥🪷🚥🪷🚥🪷


🔰 *இன்றைய நித்தியக்கடன்*


🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🔰 *இன்றைய சாதகம்* 


🔰 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்ததவம்.


🔰 *இன்றைய நற்சிந்தனை* 


🔰 உடல் அழகை பெரிதாக எண்ணி வாழும்போது அது பெரும்பாலும் நமக்கு பொருள் செலவை அதிகரிக்கிறது. உடல் அழகு நிரந்தரம் இல்லாதது நிலையில்லாதது. உடல் அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும் போது அது பெரும்பாலும் பிழைகள் நிறைந்த வாழ்க்கையாகவே அமைகிறது. மன அழகுதான் உண்மையான அழகாகும்.


🔰 *இன்றைய தற்சோதனன*


🔰 சிறப்புமிக்க பழக்கவழக்கங்களில் உங்களை இணைத்துக் கொண்டு செயலாற்றும்போது, அந்த செயல்கள் வழியாக நம்முடைய உயிர் நிலை பலப்படுகிறது. உடல் அழகு காட்டிலும் மன அழகே சிறந்த அழகாகும். இது நிரந்தரமான அழகு. இந்த அழகை பேணிக் காத்துக் கொள்வதில் முக்கியத்துவம் கொடுத்து, கவனம் செலுத்தும் போது நாம் எல்லா வகையிலும் நிறைவாக வாழ முடியும். சமுதாயத்திற்கு ஒரு நல்ல சிறந்த மனிதனாக நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.


🔰 *இன்றைய பண்புப்பயிற்சி*


🔰 நல்லதையே எண்ணுதல், நல்லதையே சிந்தித்தல், நல்லவிதமாகவே செயல்புரிதல் இந்த பண்புகள் தான் உயிரைக் காக்கக் கூடிய மனதிற்கு அழகாக அமைகிற பண்பாகும். உயிரும், மனமும் அழகாக இருக்கும் போது உடலும் அதனோடு சேர்ந்து அழகாகவே இருக்கும். உடலை மட்டும் அழகுபடுத்தி எண்ணி வாழ்வது ஒருவகையான அறியாமை, இந்த இருளிலிருந்து உங்களை நீங்கள் வெளியேற்றிக் கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்...        


🔰 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*


🔰 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      *🌸வாழ்க வையகம்🌸*

   *🍁வளர்க வேதாத்திரியம்🍁*

      *🌸வாழ்க வளமுடன்🌸*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments