💠⛳💠⛳💠⛳💠⛳💠⛳💠
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*டிசம்பர் 10*
💠⛳💠⛳💠⛳💠⛳💠⛳💠
🔅 *இன்றைய நித்தியக்கடன்*
🔅 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔅 *இன்றைய சாதகம்*
🔅 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம்,
மாலை:- இறைநிலை தவம்.
🔅 *இன்றைய நற்சிந்தனை*
🔅 மறைபொருளாய் இருந்து செயல் புரியும் செயல்களையும், உண்மைகளையும் நாம் உணர்ந்து கொள்ளாமல் வாழ்க்கையை ஒரு நாளும் ஒரு பொழுதும் நீந்தி கடைத்தேறி விட முடியாது. நாம் கடந்து போகும் ஒவ்வொரு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு பின்னாலும் ஒரு இறைத்தத்துவம் ஆழமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தை எவரொருவர் புரிந்து கொண்டு மதித்து தன்னுடைய வாழ்வை வாழ்கிறாரோ, அவரே நிறைவான வாழ்வை மனமகிழ்ச்சியை, இந்த பூமிக்கு வந்த தன்னுடைய முழு பலனையும் அனுபவமாக பெறுவார்.
🔅 *இன்றைய தற்சோதனன*
🔅 இந்த மறைபொருள்கள் உண்மைகளை உணர்வதற்கு, நமக்கு ஏற்கனவே அதனுடைய அமைப்பும் சிறப்பும் நிறைவாக அமைந்திருக்கிறது. அதை தூண்டிவிட்டு அந்த ஒளியில் நம் உயர்வை காணமுடியும். இன்னது தான் என்பது இறைநீதி, இந்த நீதி ஒருநாளும் எவருக்காகவும் மாற்றம் பெற போவது இல்லை. உயிரின் உண்மையான தன்மைக்கும் தரத்துக்கும் உயர்வதற்கு உகந்த செயல் பண்புகளை செய்து வாழ வேண்டும்.
🔅 *இன்றைய பண்புப்பயிற்சி*
🔅 பூவுக்கும் காய்க்கும் என்ன வாசனை என்பதை தீர்மானித்து, அந்த தீர்மானமாகவே இருந்து வாழும் இறைவனை புரிந்து கொள்வதற்காக உருவானதுதான் இந்த மனித தோற்றம். பிரபஞ்ச உண்மைகளை எல்லாம் நாம் உணர்ந்து கொள்வதற்கு இந்த மனித பிறவியே போதுமானது. இதை சார்ந்த செயல்பாடுகள் நமக்குள் ஒவ்வொரு கணப்பொழுதும் உயர்வு பெற வேண்டும். அவ்வாறு உயரும் போது நமக்குள் இயல்பான இறை ஞானம் பெருகும். வாழ்க வளமுடன்...
🔅 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔅 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment