நித்தியக்கடன் டிசம்பர் 06 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 06


💐❄️💐❄️💐❄️💐❄️💐❄️💐


🌸 இன்றைய நித்தியக்கடன்


🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🌸 இன்றைய சாதகம் 


🌸 வெள்ளிகிழமை காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.


🌸 இன்றைய நற்சிந்தனை 


🌸 ஒரு மரம் முழுமையாக விதைக்குள் அடங்கியிருக்கிறது, அதனுடைய பூ, காய், கனி, இலை, கிளை, மரத்தினுடைய தன்மை, தரம் அனைத்தும் ஒரு விதைக்குள் அடங்கியிருக்கிறது. இது போன்று தான் மனிதனுக்குள் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்தும் அடங்கியிருக்கிறது. அண்டம் வேறு பிண்டம் வேறு அல்ல இரண்டுமே ஒன்றுதான்.


🌸 இன்றைய தற்சோதனன


🌸 வினை பதிவுகளோடு வந்த இந்த தேகத்தை தூய்மைபடுத்தி கொள்வதற்காகவே, இந்த மனிதப் பிறவி அமைந்திருக்கிறது. புலன்களை நீங்கள் 80% இந்த வினை பதிவுகளை போக்கிக் கொள்வதற்காக பயன்படுத்துங்கள். அப்போதுதான் வாழ்க்கை துன்பமில்லாமல், அமைதியாகவும், நிறைவாகவும் அமையும். வித்து தொடராக வந்த இந்த தேகம் விளங்கின பதிவுகளோடு வந்திருக்கிறது. இவைகளை முறையாக போக்கிக் கொள்ளும் முயற்சியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போதுதான், தெய்வ அறிவு ஒளி வீசும் உள்ளுணர்வு தன்மை மேலோங்கும்.


🌸 இன்றைய பண்புப்பயிற்சி


🌸 தெய்வ நிலையும், விலங்கு நிலையும் ஒன்று கலந்து உருவாகி இருப்பது இந்த தேகமாகும். மிருக நிலைக்கு வாய்ப்பு கொடுத்து, அவை சார்ந்த சிந்தனையும், செயல்களும் உங்களிடமிருந்தால் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக தான் இருக்கும். தெய்வ நிலைக்கு வாய்ப்பு கொடுத்து இது சார்ந்த பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். தான் துன்பப்படாமலும், பிறரை துன்பப்படுத்தாமலும், வாழும் பண்பு தெய்வநிலை பண்பாகும். இந்தப் பண்பில் நாளுக்கு நாள் சிறந்து விளங்குவீர்கள் வாழ்க வளமுடன்...             


🌸 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌸 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments